angusam 12/11/2015

relationship2“”முன்பெல்லாம் இந்தமாதிரி உறவுகள் பற்றி யாராவது ரகசியமாக விசாரித்தால், “ப்ளீஸ் வெளியே சொல்லிடாதீங்க’ என்பார்கள். இப்போ தோ, “ஆமா… அதுக்கென்ன’ என்கிறார்கள் வெளிப் படையாகவே. இதுதான் நாம் சந்தித்துக்கொண்டி ருக்கும் மாற்றம்” என்கிறார் பாலியல் நிபுணர் டாக்டர் நாராயண ரெட்டி. இந்திராணி முகர்ஜியும் கோகுலும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

இந்திய சேனல்களில் அண்மைக் காலத்தில் அதிக நேரத்தை எடுத்து சாதனை படைத்திருப்பது இந்திராணி விவகாரம்தான். மீடியா அதிபர் பீட் டர் முகர்ஜிதான் இந்திராணியின் கணவர். ஆனால் பீட்டரின் மகன் ராகுல், இந்திராணியின் மகன் இல்லை. காரணம், இந்திராணிக்கு பீட்டர் முகர்ஜி மூன்றாவது கணவர். இந்திராணி தன்னுடன் இருந்த ஷீனா போராவை, “”இவள் என் தங்கை”’என முகர்ஜியையும் அவரது முதல் தாரத்து மகன் ராகுலையும் மற்றவர்களையும் நம்பவைத்தார். இந்திராணிக்கு ஷீனா தங்கை என் றால் ராகுலுக்கு சித்தி முறை ஆகிறது. ஆனால் அவர்களுடைய வயதும் பருவமும் அப்படிப்பட்ட உறவுமுறை கொண் டாடத் தயாராக இல்லை. காதலர் களாக நெருங்கிவிட்டனர். ராகுல்-ஷீனா காதலையும் உறவையும் அறிந்த இந்திராணி அதிர்ச்சியடைந்தார். காரணம், ஷீனா அவருடைய தங்கை இல்லை. முதல் கணவன் மூலம் அவருக்குப் பிறந்த மகள். பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்ததால் இந்தி ராணிக்கு ராகுல், மகன் முறை. அதாவது உறவுமுறையில் அண்ணன்-தங்கைகளான ராகுலும் ஷீனாவும் காதலர்களாகிவிட்டார்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தனது இரண்டா வது கணவன் சஞ்சீவை துணைக்கழைத்தார் இந்திராணி.

இருவரும் திட்டமிட்டு, ஷீனாவை தீர்த்துக் கட்டி, ராய்காட் காட்டுப்பகுதியில் உடலை வீசிவிட் டது பற்றிய விசாரணைதான் இப்போது நாடு முழுக்க பரபரக்கிறது. இதன் பின்னணியில் வேறு என்னென்ன மர்மங்கள் உள்ளன என்பது விசாரணையில் தெரியவரும். சினிமா ஹீரோயின்களுக்கு கிடைக்காத பேரும் புகழும் மீடியாக்கள் மூலம் இந்திராணிக்கு கிடைத்துள்ளது. “”அவரது கதையை வைத்து பல படங்கள் எடுக்கலாம்” என்கிறார்கள் பாலிவுட்காரர்கள். (இந்திராணி குடும்ப உறவு முறையை வரைபடம் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்) பெங்களூரு கோகுலின் கதை வேறுவிதமானது. பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்துக்கும், டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கும் வந்த வெடிகுண்டு மிரட்டல் மெசேஜ் தொடர்பாக ஜோஸ் என்பவரை விசாரித்தது போலீஸ். அது உண்மை இல்லை. வெறும் வதந்தி. அந்த வதந்தி ஜோஸ் பெயரில் வாங்கப்பட்ட சிம்மிலிருந்து மெசேஜ் செய்யப்பட்டிருந் தாலும் அது ஜோஸ் அனுப்பிய மெசேஜ் இல்லை. அவருடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாளங் களை வைத்து அவர் பெயரில் நண்பர் கோகுல் வாங்கிய சிம் என்பது தெரிந்தது. ஆனால், கோகுல், ஜோஸின் நண்பர் இல்லை. ஜோஸ் மனைவி மேகனா வின் காதலன். (பெண் பெயர் மாற்றப்பட்டுள்ளது) கேரள மாநிலம் திருச்சூரில் படிக்கும்போதே மேனகையின் வலையில் விழுந்த விஸ்வாமித்ர முனிவர் போல மேகனா மீது மையல் கொண்டார் கோகுல். இவங்களுக்கு கைகூடவில்லை. டெல்லி போலீஸ் அதிகாரி மகள் அனுராதாவை திருமணம் செய்து கொண்டார் கோகுல். ஒரு பெண் குழந்தையும் உண்டு. மேகனாவுக்கு ஜோஷுடன் திருமணம் நடந்தது. கல்யாணம் வேறு வேறு இடங்களில் நடந்தாலும் காதல் பழையபடியே இருந்துள்ளது.

அனுராதா தனது கணவர் கோகுலுடன் நல்லுறவுடன்தான் இருந்தார். ஆனால் அனுராதாவுக்கு அந்த ஒரு உறவு மட்டும் இல்லை. இன்னொரு தொடர் பும் இருந்துள்ளது. இதைக் கண்டறிந்த கோகுல், தன் மனைவியின் நடத்தையை அம்பலப்படுத்தி அசிங்கப் படுத்திவிட்டால், தன் பழைய காதலியை அடைய தடை இருக்காது என நினைத்தார். போலி பெயர்களில் இரண்டு இ-மெயில் முகவரிகளை உருவாக்கினார். சாய்பாபா என்ற மெயில் முகவரி மூலம் தன் மனைவி அனுராதாவிடம் யாரோ புது நண்பர் போலப் பேசி, மனைவியின் அந்தரங்கத் தொடர்புகள் பற்றிக் கறந்துவிட்டார். அதன்பிறகு ஆஷா என்ற பெயரில் மற்றொரு மெயில் முகவரியிலிருந்து தன்னை ஜோதிடர் எனச் சொல்லி மனைவியிடம் அறிமுகமான கோகுல், உங்கள் கணவனை (தன்னைத்தான்) பிரிந்து, காதலனு டன் நிரந்தரமாக சேரவேண்டுமென்றால், உங்கள் காதலனுடன் நீங்கள் இருக்கும் அந்தரங்கப் படங்களை வைத்து பூஜை செய்யவேண்டும் என்று போடு போட்டார். ஜோதிடர் சொல்கிறார் என நம்பி, காதலனோடு உள்ள அந்தரங்கப் படங்களை கணவனுக்கே அனுப்பி னார் அனுராதா.

relationship1கோகுல் அடுத்த கட்டமாக, தன் பழைய காதலி மேகனா குடியிருந்த அப்பார்ட் மெண்ட்டுக்கே அனுராதாவுடன் குடிவந்தார். மேகனாவின் கணவர் ஜோஸிடம் நண்பர் போல பழகினார். அனுராதாவிடம் ஜோதிடர் ஆஷா என்ற மின்னஞ்சல்  முகவரி மூலம் தொடர்புகொண்டபடி இருந்தார். “”உன் காதல னோடு உள்ள படங்களை வைத்து வீட்டில் பூஜை செய்ய வேண்டும். அதற்கு நீ மது போதை யில் இருக்கவேண்டும்” என்றார். ஏற்கனவே காதல் போதையில் இருந்த அனுராதா, வீட்டிலேயே மது அருந்தி போதை ஏற்றிக்கொண்டார். ஆஷாவாக தகவல் அனுப்பிவிட்டு, கோகுலாக வீட்டுக்கு வந்த கணவன், மதுமயக்கத்தில் இருந்த மனைவியை வீடியோ எடுக்கவே இருவருக்கும் சண்டை நடந்தது.

பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையால் அனு ராதாவின் தலையில் அடித்துக் கொன்ற கோகுல், மதுபோதை யில் டி.வி ஸ்டாண்டில் இடித் துக் கொண்டு அனுராதா செத் துப்போனதாக சொன்னார். முன்னாள் போலீஸ் அதிகாரி யான அனுராதாவின் அப்பா வும் போதை நிலையில் இறந்த தன் மகளுக்கு மேலும் அவ மானம் வேண்டாம் என நினைத்து, எதிர்பாரா விபத்து என வழக்குப்பதிவு செய்ய வைத்தார். இந்த நிலையில்,  மேகனா கணவர் ஜோஸ்க்கு பிலிப் என்ற நண்பர் மின்னஞ்சல்களை அனுப்பிக்கொண்டிருந்தார். குடும்ப உறவுகள் பற்றிப் பேசினார். மனைவியை விவாகரத்து செய்யுங்கள் என்றார். பிலிப் என்று யாரும் இல்லை. அதுவும் கோகுலின் போலி மின்னஞ்சல்தான். இது தெரியாமல், வாசலில் உட்கார்ந்து மிக்சர் சாப்பிடும் கேரக்டர் போல தன் வீட்டுக்குள் கோகுலை அனுமதித்தபடி இருந்தார் ஜோஸ். காதலி மேகனா வை நிரந்தரமாக அடைய நினைத்த கோகுல், ஜோஸின் பாஸ் போர்ட்-போட்டோக்களை எடுத்து அவர் பெயரில் சிம்கார்டு வாங்கி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மெசேஜ் அனுப்ப, போலீசிடம் சிக்கிக்கொண்டிருக்கிறார்.

“”எனக்காக இத்தனை ஆபத்துகளை கோகுல் எதிர்கொண்டிருக்கிறார் என்பதால் அவர் மீது அன்புதான் கூடுகிறது” என்கிற மேகனா, “”அவர் சிறைக்குப் போயிட்டதால அவரோட குழந்தையை நான் பார்த்துக்குவேன். என் புருஷனும் சகிப்புத்தன்மை உள்ளவர்” என்கிறார்.

இந்திராணி, கோகுல் விவகாரங்கள் போல ஏராளமான உறவுக்கதைகள் மீடியாக்களில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றனவே, “”எதுவும் தப்பில்லை என அளவு மீறும் அந்தரங்கம்தான் கலாச்சாரமா” என்று கேட்டால், “”எது கலாச் சாரம்?” என்று கேட்கும் டாக்டர் நாராயண ரெட்டி, “”இது எல்லாமே நம் சமுதாயத்தின் ஒரு பகுதிதான். நம் சமூகத்தில் செக்ஸ் பற்றி பேசத் தயங்குவோம். ஆனால் முறையற்ற உறவுகள் புராண காலத்திலிருந்தே நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அவை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வெளிப்படுகின்றன” என்கிறார்.

திருமண பந்தம்-குடும்பப் பொறுப்பு-பிள்ளைகளுக்காக வாழ்வது ஆகியவற்றை இன்றைய மேல்தட்டு தலைமுறை தங் கள் வாழ்க்கையின் தடைக்கற்களாக நினைக்கின்றன. விருப்பப்படி வாழ்வோம். அதற்கு கல்யாணம் ஒரு தடையில்லை என்பதைத் தான் அவர்களின் செயல்கள் வெளிப்படுத்துகின்றன.  பொரு ளாதார வசதிகளும் தொழில்நுட்ப வளர்ச்சியும் அவர்களை இந்த மனநிலைக்குத் தள்ளுகின்றன. பருவமாற்ற காலம் போல இது சமுதாய மாற்றக் காலம். “இதுவும் கடந்து போகும்’ என்கிறார்கள் சமூக ஆய்வாளர்கள்.

நன்றி நக்கீரன்

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*