angusam 14/11/2015

wpid-images-10.jpg.jpegஇந்தியாவில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாத இந்திய கிரிக்கெட் போர்டினால் தேர்வு செய்யப்பட்டு  இந்திய அணிக்காக விளையாடியவர்களில், சச்சின், டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமன், கங்குலி, கவாஸ்கர், ரோகன் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, கும்ளே, ரெய்னா, ரோகித் சர்மா, வெங்சர்க்கார், ஸ்ரிகாந்த், சேதன் சர்மா, இஷாந்த்சர்மா, அஸ்வின், அகர்கர், ஹிரிகேஷ் கனிட்கர், ஸ்ரிநாத், வினுமன்கட், அஜித் வடேகர், ஜி.ஆர்.விஸ்வனாத், பிரசன்னா, யஷ்பால்சர்மா, மனோஜ்பிராபகர், சந்திரசேகர், திலீப்ஜோஷி, சுனில்ஜோஷி, ராமசாமி, ராபின்சிங், ஸ்ரிராம், முரளிவிஜய், அனிருத், வெங்கடேசபிரசாத், அசோக்மல்ஹோத்ரா, முரளிகார்திக், தினேஷ்கார்திக், ஷ்ரிசாந்த், திலீப்சர்தாரி, டி.ஏ.சேகர், சிவராமகிருஷ்ணன், ஆனந்த், புஜாரா, ஒஜா, எல்.பாலாஜி, லாலாஅமர்நாத், மொகிந்தரமர்நாத், மதன்லால், வெங்கட்ராகவன், அசோக்மன் கட், பார்த்தசாரதிசர்மா, சுரிந்தரமர்நாத், ராஜீவ்குல்கர்னி, கோபால்சர்மா, சந்திரகாந்த்பண்டிட், அஜய்சர்மா, சஞ்ஜீவ்சர்மா, எம்.வெங்கட்ரமணா, சுபரடோபானர்ஜி, பத்ரிநாத், ராகுல்சர்மா, சவுரவ்திவாரி, ஜோகிந்தர்சர்மா, அமித்மிஷ்ரா, விஜய்பரத்வாஜ், ஜியானந்ரேபான்டே, எல்.ஆர்.சுக்லா, ஜதின்பரஞ்பே, நிலேஷ்குல்கர்னி, உத்பால்சட்டர்ஜி, பிரசாந்த்வைத்யா, தீப்தாஷ்குப்தா, சி.ஆர்.ரங்காச்சார், சடகோபன்ரமேஷ், டபிளு. வி.ராமன், பி.கே.வி.பிரசாத், டி.சீனிவாசன், காண்டுரங்னேகர், அமோல்மசூம்தார், அஜித்பாய், மதன்மாந்ரி, கிருஷ்ணராவ், ஹேமந்த்கனிட்கர், பொச்சய்யா கிருஷ்ணமூர்த்தி, விஜய்மஞ்ரேகர், நானா ஜோஷி, மான்டுபானர்ஜி (இன்னும் சில பெயர்கள் விட்டுப்போயிருக்கலாம்) ஆகியவர்கள் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள் ஆவர்.

இந்தியாவில் 3 சதவீதமே உள்ள பிராமண வகுப்பினருக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது.  இந்தியாவில் சுமார் 28 சதவீதம் உள்ள  தாழ்த்தப்பட்ட மற்றும்  பழங்குடி வகுப்பினரிலிருந்து இது வரையில் ஒரேஒரு  வீரரைக் கூட கிரிக்கெட் போர்டு தேர்வு செய்ததில்லை.  ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்ய வேண்டுமென்றால் ஒட்டு மொத்த மக்கள் தொகையான 120 கோடி மக்களிடமிருந்து  தேர்வு செய்யாமல் தயிர்சாதம் சாப்பிடும்  சுமார் 3.5 கோடி  பிராமண வகுப்பிலிருந்து மட்டும்  தேர்வு செய்கிறார்கள். அதனால் வேகம் சரிவர எடுபடவில்லை.  சூழ்ச்சி மிகுந்த சுழல் மட்டும் சிறிதளவு எடுபடுகிறது. இந்த அணிகளையும் வைத்துக்கொண்டு ஜாட் இன கபில்தேவும் ரஜபுத்திர தோனியும் உலக கோப்பைகளை  வென்று காட்டியது அண்ட அதிசயம்.

அரசுப் மற்றும் தனியார் அலுவலகங்களில் துப்புரவு பணிகளையும் மலங்களை அல்லுவதற்கும் உள்ள இடஒதுக்கீட்டை யாரும் எதிர்ப்பதில்லை. அப்பணிகளை செய்வதற்கு தாழ்த்தப்பட்ட மக்களே பெரும்பாலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.    சமத்துவம், சகோத்துவம் வேண்டுமானால் இடஒதுக்கீடு மிக அவசியம்.

நன்றி : சகோ.செல்வம்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*