ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய சுனாமி!

tsunami 2ஜப்பானில் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது 7 ரிக்டரில் பதிவானதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  இதனால் நகனோ ஷிமா தீவுகள், சத்சுனான் தீவுகள் மற்றும் சகோஷிமா மாகாணம் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.தென் மேற்கு ஜப்பானில் மகுரா ஒரு நகரில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் உருவானது. 
           நிலநடுக்கம் காரணமாக கசோஷிமா மற்றும் சத்சுனான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப் பட்டது. அதை தொடர்ந்து அங்கு சிறிய அளவில் சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் சிறிது நேரத்தில் அங்கு சுனாமி எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம், உயிர்சேதம் மற்றும் காயங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. 
           2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். புகுஷிமா அணு உலை வெடித்து கதிரியக்கம் வெளியானது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *