நடிகர் நகுலுக்கு திருமணம் ! மணப்பெண்ணின் பெயரை மறைப்பது ஏன்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானாலும் நடிகர் நகுலை அடையாளம் காட்டிய திரைப்படம் ‘காதலில் விழுந்தேன்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பினும் இன்னொரு ஹிட் படத்தை எதிர்நோக்கியிருந்த நகுலுக்கு சமீபத்தில் வெளியான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ திரைப்படத்தின் வெற்றியால் பெரும் உற்சாகத்தில் உள்ளார்.

Nakul-with-Devayaniஇதே உற்சாகத்தோடு அவர் தனது திருமணம் குறித்த தகவலையும் மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் தன்னுடைய வாழ்க்கையின் ஏற்ற இறக்கத்தில் முக்கிய பங்கு வகித்த அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறிய நகுல், அனேகமாக இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் தங்கள் திருமணம் நடைபெறலாம் என்றும் அவர் கூறினார். இருப்பினும் தான் காதலிக்கும் பெண்ணின் பெயரை தற்போது தெரிவிக்க அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ திரைப்படத்தின் வெற்றியால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்த ஒரு வெற்றிக்காகத்தான் இத்தனை வருடங்கள் காத்திருந்ததாகவும் கூறிய நகும், தன்னுடைய அடுத்த படமான ‘நாரதன்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை அடையும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *