Day: November 15, 2015

angusam 15/11/2015

திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட் பகுதியில் மின்சாரம் பாய்ந்து மீன் வியாபாரி இன்று உயிரிழந்தார்.திருச்சி பீமநகர் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (37). புத்தூர் மீன் மார்க்கெட்டில் கடை வைத்து மீன் வியாபாரம் செய்து வந்தார்.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று விற்பனை அதிகம் நடைபெறும் என்பதால், அதிகாலை 4 மணிக்கு கடைதிறக்க வந்தார் நாகேந்திரன். அப்போது கடையின் முன்பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து மீன்களை வைக்கும் பெட்டியின் மேல் கிடந்ததைக் கண்டு, மின் கம்பியை குச்சி மூலம் […]

angusam 15/11/2015

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க சென்றிருந்தார். பெரிய காட்டுப்பாளையம் என்ற இடத்தில் விஜயகாந்த் வந்த வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் பண்ருட்டி எம்.எல்.ஏ சிவகொழுந்துவின் தலையில் பளார் பளாரென்று 4 முறை அடித்தார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், எம்.எல்.ஏக்களை அடிப்பது இது முதல் முறையல்ல.ஏற்கெனவே தருமபுரி எம்.எல்.ஏ பாஸ்கரை அடித்துள்ளார். இதே சிவக்கொழுந்துவை கடந்த […]

angusam 15/11/2015

அஜித் நடிப்பில் வேதாளம் படம் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை நேற்று பார்த்த நடிகை குஷ்பு அஜித்தை புகழ்ந்து தள்ளிவிட்டார்.அதிலும் படம் பார்த்து கொண்டிருக்கும் போதே அஜித்தின் நடிப்பு குறித்து பல டுவிட்டுகளை பதிவு செய்தார். இதோ

angusam 15/11/2015

விருதுநகரில் மழைக்கு அரசு பஸ் ஒழுகியதால் டிரைவருக்கு, கண்டக்டர் மற்றும் பயணிகள் மாறி மாறி குடை பிடித்த கொடுமையான காட்சி இன்று அரங்கேறியது. தனியார் பஸ்கள் அனைத்தும் நவீனமாக ஓடும் நிலையில், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 70 சதவீத பஸ்கள் ஓட்டை, உடைசலாக உள்ளன. திருநெல்வேலி கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ் கேரளா மாநிலம் சென்றபோது பெண் பயணி பஸ்சில் இருந்த ஓட்டையில் இருந்து கீழே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில், விருதுநகரில் […]

angusam 15/11/2015

cyclins என்று அழைக்கப்படும் புரத மூலக்கூறுகள் செல்களிலிருந்து வேகமாக பிரிந்து மலேரியா ஒட்டுண்ணிகள் உருவாக காரணமாக இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் ஒரு குழு தலைமையிலான இந்த  ஆய்வு, புதிய மலேரியா சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மலேரியாவால் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு அரை மில்லியன் இறப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். செல் பிரிதலுக்கு தேவையான ஒரு முக்கியமான புரத மூலக்கூறு cyclins ஆகும். சிறிய மலேரியா ஒட்டுண்ணியை கொண்டுள்ள cyclins செல் […]

angusam 15/11/2015

உணவு பழக்கவழக்கத்தில் மாற்றம் மற்றும் குழந்தகளின் உட்புற செயல்பாடுகளின் மாற்றத்தால் வியத்தகு புதுமையான வாழ்க்கை முறை ஏற்பட்டு வழக்கத்திற்கு மாறாக குழந்தைகளுக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து தீவிர நிலையை அடைகிறது என்று இந்த ஆய்வை மேற்கொண்ட SRL கூறுகிறது. இந்த ஆய்வாளர்கள் நடத்திய மூன்று வருட நீண்ட HbA1c சோதனைகளின் மூலம் இந்தியாவில் 66.11 விழுக்காடு குழந்தைகள் தங்கள் உடலில் அதிகமான சர்க்கரை அளவை உடையவர்கள் என்று தெரியவந்தது. இந்த சோதனை நீரிழிவு சிகிச்சை சரிபார்க்க, […]

angusam 15/11/2015

நீரிழிவு நோயால் பார்வை குறைபாடு மற்றும் ஊனம் போன்ற அதிக ஆபத்து ஏற்படுகிறது. இந்த ஆபத்தை குறைக்க இரண்டு புதிய மருந்துகளை ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளரான Julia Hippisley-Cox மற்றும் Carol Coupland இருவரும் சேர்ந்து, 10 ஆண்டுகாலமாக நீரிழிவு நோயினால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பார்வை கோளாரு ஆபத்தை சரிசெய்ய புதிய மருந்துகளை கண்டறிந்துள்ளனர். ஆய்வில் 25-84 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பல்வேறு வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 455,000 தனிநபர்களுக்கு […]

angusam 15/11/2015

இ-சேவை மையங்கள் மூலமாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகத்தில் ஒரு இ-சேவை மையமும், தமிழகத்தில் உள்ள மொத்தம் 264 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தலா ஒரு இ-சேவை மையமும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு இ-சேவை மையமும், […]

angusam 15/11/2015

ஐஸ்வர்யாராயுடன் காதல் மோதல் வந்து பிரிந்ததும் ஐஸ் போன்ற தோற்றத்தில் இருந்த துபாய் பெண் சிநேகா உல்லாலை தனக்கு ஜோடியாக அறிமுகம் செய்தார் சல்மான்கான். அதன்பிறகு அவரை கண்டுகொள்ளவில்லை. கத்ரினா கைஃப்புடன் காதல் மோதல் வந்து பிரிந்ததும் கத்ரி போன்ற தோற்றமுடைய மும்பைப் பெண் ஜரீன்கானை தனக்கு ஜோடியாக அறிமுகப்படுத்தினார் சல்மான்கான். ஆசைகாட்டி அறிமுகப்படுத்தியதுடன் சரி… பிறகு அவர் களைக் கண்டுகொள்ளவில்லை. இருவரும் சல்மான் கண்டு கொள்ளாதது குறித்து வெளிப்படையாகவே தெரிவித்தும் பிரயோஜனமில்லை. டோலிவுட்டுக்கு வந்தார் சிநேகா. […]

angusam 15/11/2015

சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டுக்கு நள்ளிரவில் சென்றோம். திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி அது. அடர்ந்த இருள். எங்கோ நாய் விட்டு விட்டுக் குரைத்துக் கொண்டிருந்தது. சுடுகாட்டு முகப்பை நெருங்கும் போது “”ஓம்… ரீம்… க்ரீம்…” என்ற குரல், தகரத்தை சாலையில் தேய்ப்பதுபோல் கரடு முரடாய் ஒலிக்க, அதை அப்படியே எதிரொலித்தன இன்னும் சில குரல்கள். அப்போது மணி நள்ளிரவு 12.05. மெல்ல சுடுகாட்டுக்குள் அடியெடுத்து வைத்தோம். தூரத்தில் ஏதோ நெருப்பு வெளிச்சம் லேசாய்த் தென்பட, அதனைச் சுற்றி மசங்கலாய் […]

angusam 15/11/2015

ரஜினி நடிக்கும்  ‘கபாலி’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக தற்போது மலேசியாவில் தங்கியுள்ளார். மலேசியாவில் ரஜினி போகும் இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், மலேசிய, ஜப்பானி, சீன மக்களும் ரஜினியைக் காண ஆவலுடன் திரண்டு வருகிறார்கள். பலர் அவரைக் கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். சிலர் அவரது முழு உருவத்தையும் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டு போய் அவரிடமே காட்டி மகிழ்கின்றனர். இருதய நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகையின் ஒருவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அந்த […]