மீன் வியாபாரியின் உயிரை குடித்த அறுந்து கிடைந்த மின்சார கம்பி

திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட் பகுதியில் மின்சாரம் பாய்ந்து மீன் வியாபாரி இன்று உயிரிழந்தார்.திருச்சி பீமநகர் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (37).

புத்தூர் மீன் மார்க்கெட்டில் கடை வைத்து மீன் வியாபாரம் செய்து வந்தார்.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று விற்பனை அதிகம் நடைபெறும் என்பதால், அதிகாலை 4 மணிக்கு கடைதிறக்க வந்தார் நாகேந்திரன். அப்போது கடையின் முன்பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து மீன்களை வைக்கும் பெட்டியின் மேல் கிடந்ததைக் கண்டு, மின் கம்பியை குச்சி மூலம் நாகேந்திரன் அகற்ற முயன்றாராம்.அப்போது மின் கம்பியின் ஒருமுனை நாகேந்திரன் மீது எதிர்பாராவிதமாக பட்டதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் கபிலன் உள்ளிட்டோர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த நாகேந்திரன் குடும்பத்துக்கு மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்சோதி ஆறுதல் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *