Day: November 17, 2015

angusam 17/11/2015

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் கோவனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊத்திக் கொடுத்த உத்தமி” பாடலுக்காக கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் கைது செய்யப்பட்டார், கோவன். இதன் பிறகு ஊடகங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தது. இடையில் தோழர் கோவனை போலிஸ் விசாரணைக்காக காவலில் எடுத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. […]

tomscratch20042007 17/11/2015

மும்பையில் மதுபோதையில் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட மாடல் அழகி ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை பிடித்து நெரித்தார். இந்த காட்சியை கமிஷனர் உத்தரவு காரணமாக போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மும்பை வெர்சோவாவில் உள்ள இன்லக்ஸ் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாடல் அழகி தேவ்தத்தா. இவர் சம்பத்தன்று இரவு தன் வீட்டின் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த […]

angusam 17/11/2015

இயக்குனர் பாலா, ’சேது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்தவர். அதன் பின், ’நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்ற முக்கியமான படங்களை இயக்கினார். நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றார். அதிலிருந்து பாலாவின் படங்கள் என்றாலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நாயகர்கள் அனைவருமே இவருடைய பட்டறையில் இருந்து தான் பெரிய நாயகர்களாக வளர்ந்திருக்கிறார்கள். தற்போது […]

angusam 17/11/2015

தமிழகத்தில் பெய்த மழையையை பற்றியும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் எனவும் ஏற்கனவே பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வானத்தில் சுழலும் நவகிரகங்களின் இயக்கம், அதனால் உலகில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை தொடர்பான குறிப்புகள் அடங்கியதுதான் பஞ்சாங்கம் என அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் நவீன வானியல் ஆய்வுக்கருவிகள் இல்லாத சூழ்நிலையில், முனிவர்கள் நவ கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாக கணித்தனர். தங்களின் கணிப்புகளை சுலோகங்களாக எழுதியும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையாக வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இந்த பஞ்சாங்கங்களின் உதவியுடன் […]

angusam 17/11/2015

சித்தூர் மேயர் கட்டாரி அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோரை மர்ம கும்பல் ஒன்று சுட்டுக் கொலை செய்தது பரபரப்பாகியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் நகராட்சி மேயர் அனுராதா. இவரது கணவர் கட்டாரி மோகன் தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்தவர். இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மேயர் அனுராதா அலுவலகத்தில் நுழைந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அனுராதா மற்றும் அவரது கணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு கத்தியாலும் குத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். […]

angusam 17/11/2015

வில்லிவாக்கத்தில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் எம்எல்ஏ பார்த்தசாரதி வட சென்னை மாவட்ட. செயலாளர் யுவராஜ் மற்றும் பொதுமக்கள்  இரண்டு  பேரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடி உதை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு

angusam 17/11/2015

தீபாவளிக்கு அடுத்து தமிழ் திரையுலகின் கொண்டாட்டமான திருவிழா, பொங்கல். பொங்கல் அன்று வழக்கமாக பெரிய படங்கள் இரண்டு மூன்றாவது வெளியாகும். இந்தமுறை பொங்கல் ரேஸில் விஷால், ஜெயம் ரவியின் படங்கள் இணைந்துள்ளன. பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம், கதகளி. ஆக்ஷ்ன் படமாக தயாராகியிருக்கும் இப்படம், இறுதிகட்டத்தில் உள்ளது. பொங்கலுக்கு கதகளியை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேபோல் ஜெயம் ரவியின் மிருதன் படத்தையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். அத்துடன் சூர்யாவின் 24, பாலாவின் தாரை தப்பட்டை, சுந்தர் சி.யின் […]

angusam 17/11/2015

முதல்வர் ஜெயலலிதா உத்தரவு படி மழைபெய்துள்ளது – உளறிக்கொட்டிய சேலம் கலெக்டர் வாட்ஸ் அப்பில் வைரலாகும் வீடியோ.. அண்ணே நீங்க கலெக்டர் இல்ல, தெய்வம். https://angusammedia.files.wordpress.com/2015/11/wpid-vid-20151117-wa0022.mp4 வீடியோ : தினமலர். காம்

angusam 17/11/2015

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக சில ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இந்த குற்றச்சாட்டைக் கூறிய பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி,  பிரிட்டனை சேர்ந்த Backops Limited  என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கையில் ராகுல் காந்தி […]

angusam 17/11/2015

பாபா ராம்தேவ் திவ்யா பார்மசி என்ற மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் புத்ரஜீவக் பீஜ் என்ற ஆயுர்வேத மருந்து தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்ரஜீவக் பீஜ் தயாரிப்பு, ஆண் குழந்தையை பெண்கள் பெற்றெடுக்க உதவக் கூடிய மருந்து என்றே ராம்தே பார்மசிகள் விற்பனை செய்து வருகின்றன. இவை பெரும் சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி ஆயுர்வேத மருத்துவ நிறுவனம் நூடுல்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உடனடி உணவாக […]