நான் இயக்கும் ஐந்து பேர் – தமிழ் திரையுலகின் மைல்கல்

director-bala-at-avan-ivan-location-7இயக்குனர் பாலா, ’சேது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்தவர். அதன் பின், ’நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்ற முக்கியமான படங்களை இயக்கினார். நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றார்.
அதிலிருந்து பாலாவின் படங்கள் என்றாலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நாயகர்கள் அனைவருமே இவருடைய பட்டறையில் இருந்து தான் பெரிய நாயகர்களாக வளர்ந்திருக்கிறார்கள்.arya-bala-vishal-at-avan-ivan-shooting-spot-stills07
தற்போது சசிகுமார் நாயகனாக நடித்து பாலா இயக்கியிருக்கும் ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா இசையமைத்திருக்கும் 1000வது படம் இது. விரைவில் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.
Paradesi Movie (14)
தற்போது தனது அடுத்த படத்துக்கான பணிகளில் மும்முரமாக இருக்கும் பாலா, நடிகர்கள் ஆர்யா, விஷால், அரவிந்த் சாமி, அதர்வா, தெலுங்கு நடிகர் ராணா ஆகியோரை  இணைத்து தமிழ் திரையுலகின் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அனேகமாக அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என கூறப்படுகிறது. முன்னணி நாயகர்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதால், இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *