வைரஸ் காய்ச்சலா….. 104 ஐ அழைக்கவும்

 FEVERதமிழகம் முழுவதும் கொட்டி வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல், வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக பொது சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பி தெரியப்படுத்தலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-24350496, 044-24334811. செல்போன் எண்கள்: 9444340496, 9361482899. 104 என்ற மருத்துவ சேவை எண்ணிலும் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம், தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் சளி, காய்ச்சலால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பகலில் மிதமான குளிரும், இரவில் கடும் குளிரும் வீசி வருகிறது. மேலும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

     சேலம் மற்றும் தருமபுரியில் வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகமாக காணப்படுவதால்  அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பரவி வரும் காய்ச்சலினால் அதிக பரப்பரப்பு நிகழ்ந்து வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டாக்டர்கள் ஆலோசனை வழங்கும் வார்டு, எக்ஸ்ரே, ஸ்கேன் சென்டர், ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்யும் இடம், மாத்திரை, மருந்து வாங்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  இதற்கான மருந்து அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது என்ற தகவல் பொதுமக்களிடையே சர்ச்சையை உண்டுப்பண்ணியுள்ளது.

சென்னையில் காய்ச்சல் சென்னையில் பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படாமல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 48 படுக்கைகள் கொண்ட சிறப்பு காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட அறிவுறுத்தப் பட்டுள்ளது.

                2000 பேர் பாதிப்பு ‘சென்னையில் நூற்றுக்கும் மேற்பட் டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                அச்சம் தேவையில்லை மழை காரணமாக சளி, இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு வருவதற்கு வாய்ப்புள்ளன. ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

                வெள்ள பாதிப்பு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் மற்றும் மழை வெள்ளம் புகுந்த ஊர்களில் உடனடியாக மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *