Day: November 20, 2015

tomscratch20042007 20/11/2015

பிகார்  மாநில முதல்வராக  நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசு இன்று பதவியேற்றுக் கொண்டது. நிதிஷ் குமாருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பாட்னாவில் இன்று நடைபெற்ற விழாவில், அரசியலுக்கு மிகவும் புதிதான லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜ் பிரதாப் யாதவ் (27)   3வது நபராக பதவியேற்றுக் கொண்டார். அப்போது, பதவிப் பிரமாணத்தை தவறாக படித்ததால், அவரை மீண்டும் பதவிப் பிரமாணத்தை படிக்குமாறு ஆளுநர் ராம்நாத் கோவிந்த் கூறி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

angusam 20/11/2015

 இந்தியா இளைஞர்கள், தினந்தோறும் 2.2 மணி நேரத்தை தங்களது செல்போனில் செலவிடுவதாக டி.என்.எஸ்., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.”டி.என்.எஸ்.,’ என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம், சர்வதேச அளவில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வு முடிவில், இந்தியாவிலுள்ள 16-30 வயதுடைய இளம் வயதினர்கள் தினமும் சராசரியாக 2.2 மணி நேரத்தை தங்களது செல்போனில் செலவிடுகின்றனர். இவ்வாறாக ஆண்டுக்கு 34 நாட்கள் தங்கள் செல்போனுக்காக நேரத்தை செலவழிக்கின்றனர். இதுவே சர்வதேச இளைஞர்கள் நாளொன்றுக்கு 3.2 மணி நேரம், அதாவது […]

samaraiqi4273 20/11/2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் மோகனிடம் புகார் நபரை பிடித்துத் தள்ளியதோடு அவரை பேசவிடாமல் அமைச்சர் தடுத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே வடகரசலூர் கிராம பகுதியில் உள்ள அம்மன் நகரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே சுமார் 20 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மவுலீஸ்வரன் என்ற 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் […]

angusam 20/11/2015

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள்,  ஒ.பி.எஸ் மகன்கள் மற்றும் அமைச்சர் காமராஜ், அரசு கொறடா மனேகர் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட திருச்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில், அந்த தொகுதி எம்.எல்.ஏ வளர்மதி கலந்து கொள்ளாதது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதே போல மேற்கு தொகுதி எம்.எல்.ஏ பரஞ்சோதியும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியது, ஒவ்வொருத்தரும் இது ஆளாளுக்கு விசாரிக்க ஆரம்பித்தனர். – அப்போது தான் முதல்வர் […]

angusam 20/11/2015

குளித்தலை அருகே பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவிகள் 5 பேர் மாயமாகினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகள் மாயம் கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்தவர்கள் ருதேனி(வயது 16), திஷாந்தினி(16), நிவேதா(16), சரசுவதி(16). இவர்கள் 4 பேரும் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தனர். இதேபோல் இரும்பூதிபட்டியை சேர்ந்த பிரபா(17) என்ற மாணவி அய்யர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் […]

angusam 20/11/2015

குடியுரிமை விவகாரம் தொடர்பாக என் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் காந்தி பகிரங்க சவால் விடுத்தார். சுப்பிரமணிய சாமியின் புகார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம்சாட்டியிருந்தார். அந்நாட்டில் ஒரு நிறுவனத்தை நடத்திவரும் ராகுல் காந்தி, கம்பெனி சட்ட அலுவலகத்தில், தான் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்று அவரே கூறியுள்ளதாக சுப்பிரமணிய சாமி கூறியிருந்தார். […]