angusam 20/11/2015

DSCN9841 - Copyஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள்,  ஒ.பி.எஸ் மகன்கள் மற்றும் அமைச்சர் காமராஜ், அரசு கொறடா மனேகர் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட திருச்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில், அந்த தொகுதி எம்.எல்.ஏ வளர்மதி கலந்து கொள்ளாதது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதே போல மேற்கு தொகுதி எம்.எல்.ஏ பரஞ்சோதியும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியது,

ஒவ்வொருத்தரும் இது ஆளாளுக்கு விசாரிக்க ஆரம்பித்தனர். – அப்போது தான் முதல்வர் ஜெ.வை சந்திக்க தோட்டத்திற்கு சென்றுயிருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது. காலை 11.00 மணிக்கு சந்திக்க சென்றுயிருக்கிறார்கள். அதற்கு முன்னதாக  சந்தித்த நாமக்கல் சேவற்கொடியிடம் ஜெ. ரொம்ப நேரமாக பேசிக்கொண்டேயிருந்தால் மற்ற அனைவருக்கும் நாளை பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

நேற்று வளர்மதியை முதல்வர் ஜெயலலிதா அழைத்து விசாரித்திருக்கிறார். உள்ளே நுழைவதற்கே ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டு, அவருடைய கணவரையே வெளியே நிறுத்தியிருக்கிறார்கள். எந்தவித பூங்கொத்தும் வாங்காமல் நலம் விசாரித்துவிட்டு.. முத்தரையர் பிரச்சனை பற்றியும் கேட்டு. என்ன ஜாதியை வச்சு பிரச்சனை பண்றாங்களா? என்று கோபமாக பேசியிருக்கிறார். நான் எல்லோருக்கும் முதல்வர். யாருக்கு என்னை தேவையை அதை செய்ய எனக்கு தெரியும். என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

கடந்த 5ம் தேதி புதுக்கோட்டையில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக முத்தரையர் இனத்தின் ஒரு  குரூப் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் உச்சக்கட்டமா ஆளும் அதிமுக கட்சி அலுவலகத்தையே கல் வீச்சு சம்பம் நடைபெற்றது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்தது அதிமுக தலைமை. அதிலும் இந்த பிரச்சனைக்கு முக்கியகாரணம்.அதிமுகவில் உள்ள கோஷ்டி பூசல்  தான் என்றும் அக் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களின் தூண்டுதல் காரணமாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக கூறப்பட்டது.

எம்.எல்.ஏக்கள் பரஞ்சோதி, சிவபதி, கொறடா மனோகர். குமார் எம்.பி
எம்.எல்.ஏக்கள் பரஞ்சோதி, சிவபதி, கொறடா மனோகர். குமார் எம்.பி

மேலும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து உடனே விசாரணை நடத்தி எனக்கு சொல்லுங்கள் ஓ.பிஎஸ் மூலமாக திருச்சியில் அமைச்சர் பூனாட்சியிடம் ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து டி.வி.எஸ். டோல்கோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் பெரம்பலூர் எம்பி மருதை ராஜா, எம்.எல்.ஏ க்கள் கு.ப.கிருஷ்ணன், பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி மற்றும் முத்தரையர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சிலர் கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறியும் பேசியதாக கூறப்படுகிறது. நம்முடைய சமூக மக்களுக்கு அநீதி நடக்கிறது என்கிற ரீதியில் பேசிய சொல்லப்படுகிறது.

முத்தரையர்கள் அதிர்ப்தியில் இருப்பதால் இவர்களுக்கு ஏற்கனவே ஆலங்குடி வெங்கடாசலத்திற்கு கொடுத்த மாநில அமைப்பு செயலாளர் பொறுப்பை வளர்மதிக்கு கொடுத்து அந்த சமூக மக்களை சரி செய்ய வேண்டும் என்கிற அடிப்படையிலேயே எம்.எல்.ஏ வளர்மதியை அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாகவும், அடுத்த சில நாட்களில் அவருக்கு அமைச்சர் அல்லது கட்சியில் மாநில அமைப்பு செயலாளர் இது சுலோச்சனா சம்பத் அவர்கள் இருந்த பொறுப்பு அல்லது மகளிர் அணி மாநில செயலாளர் பொறுப்பு  வழங்கப்படவுள்ளதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.

புதுக் கோட்டையில் அமைச்சருக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மறை முகமாக ஆதரவு தெரிவித்த ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு நேற்று முன் தினம் சரியான டோஸ் கிடைத்ததாம். அதன் எதிரொலியாகவே எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி, சிவபதி ஆகியோர் ஸ்ரீரங்கம் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளவில்லை  இதே போல ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய காரணகர்த்தாவான திமுகவிற்கு ஆதரவு கொடுத்தவரும் போராட்டத்தை முன்னின்று நடத்தியவருமான செல்வகுமாருக்கு  தற்போது அமைச்சர் பூனாட்சி அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும், அவருடைய மகன் அருண்குமார் இரவு நேரங்களில் அவரை சந்தித்து பேசியதாகவும் மேலிடத்திற்கு ஆதாரங்களுடன் புகார்கள் சென்றுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி உளவுத்துறை விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தது.

அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இல்லை என்றாலும் மேற்கண்ட அமைச்சர், எம்.எல்.ஏக்கள் மீது தலைமை மிகுந்த கோபத்தில் இருப்பது நாம ஒன்னு நினைக்க தெய்வம் வேற ஒன்னு நினைக்குதே! என்கிற புலம்பல் சத்தம் தான் கேட்க முடிகிறது.. !

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*