செல்போனில் செலவிடும் இந்திய இளைஞர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 cellஇந்தியா இளைஞர்கள், தினந்தோறும் 2.2 மணி நேரத்தை தங்களது செல்போனில் செலவிடுவதாக டி.என்.எஸ்., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.”டி.என்.எஸ்.,’ என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம், சர்வதேச அளவில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வு முடிவில், இந்தியாவிலுள்ள 16-30 வயதுடைய இளம் வயதினர்கள் தினமும் சராசரியாக 2.2 மணி நேரத்தை தங்களது செல்போனில் செலவிடுகின்றனர். இவ்வாறாக ஆண்டுக்கு 34 நாட்கள் தங்கள் செல்போனுக்காக நேரத்தை செலவழிக்கின்றனர். இதுவே சர்வதேச இளைஞர்கள் நாளொன்றுக்கு 3.2 மணி நேரம், அதாவது ஆண்டுக்கு 49 நாட்கள் செல்போனில் நேரத்தை செலவிடுகின்றனர். அதேபோல், இந்தியாவில் 31-45 வயதுடையோர் சராசரியாக 1.8 மணி நேரத்தையும், 46-65 வயதுடையோர் 1.5 மணி நேரத்தையும் செல்போனில் செலவிடுகின்றனர்.இந்தியாவில், வாரந்தோறும் இண்டர்நெட் பயன்படுத்தும் இளைஞர்களில், சுமார் 85% பேர் “ஸ்மார்ட்’போன்கள் வைத்துள்ளனர்.

இதில் சமூக வலைதளங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதில் 43% பேர் தினமும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்; 42% பேர் ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்கின்றனர். இளைஞர்களில் 11% பேர் செல்போன் வழியே ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் செலுத்தி, பொருட்களை வாங்கும் முறைகளை வாரம்தோறும் பின்பற்றுகின்றனர்.இந்நிலையில், இந்தியாவில் உள்ள 16-30, 31-45, 46-65 வயதுடை 3 பிரிவினருமே செல்போனில் செலவிடும் நேரத்தில் பாதியை சமூக வலைதளங்களுக்காக பயன்படுத்துவதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இப்போது இளைஞர்களும் குழந்தைகளும் எப்போதும் செல்போனும் கையுமாகவே சுற்றுகிறார்கள் என்பதையும் செல்போன் இல்லாமல் இந்தியாவில் இனி குழந்தைகள் கூட இருக்காது என்பதை காட்டுகிறது இந்த ஆய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *