பிகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசு இன்று பதவியேற்றுக் கொண்டது. நிதிஷ் குமாருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பாட்னாவில் இன்று நடைபெற்ற விழாவில், அரசியலுக்கு மிகவும் புதிதான லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜ் பிரதாப் யாதவ் (27) 3வது நபராக பதவியேற்றுக் கொண்டார்.
அப்போது, பதவிப் பிரமாணத்தை தவறாக படித்ததால், அவரை மீண்டும் பதவிப் பிரமாணத்தை படிக்குமாறு ஆளுநர் ராம்நாத் கோவிந்த் கூறி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது, பதவிப் பிரமாணத்தின் போது அபேக்ஷித் (எதிர்பார்ப்புகளை) என்ற வார்த்தைக்குப் பதிலாக உபேக்ஷித் (அலட்சியங்களை) என்று உச்சரித்துள்ளார். இதனால், மீண்டும் பதவிப் பிரமாணத்தை வாசிக்குமாறு ஆளுநர் கூற, அப்போதும் சில வார்த்தைகளை தவறாக உச்சரித்துள்ளார் தேஜ் பிரதாப் யாதவ்.
தேஜ் பிரதாப் யாதவின் இளைய சகோதரரும், லாலுவின் இளைய மகனுமான தேஜஸ்வி யாதவ் (26) பிகார் மாநில துணை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இவரை லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே அரசியலில் தனது வாரிசாக அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.