என் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள் – மோடிக்கு ராகுல்காந்தி நேரடி சவால் !

hqdefaultகுடியுரிமை விவகாரம் தொடர்பாக என் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் காந்தி பகிரங்க சவால் விடுத்தார்.

சுப்பிரமணிய சாமியின் புகார்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம்சாட்டியிருந்தார். அந்நாட்டில் ஒரு நிறுவனத்தை நடத்திவரும் ராகுல் காந்தி, கம்பெனி சட்ட அலுவலகத்தில், தான் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்று அவரே கூறியுள்ளதாக சுப்பிரமணிய சாமி கூறியிருந்தார்.

எனவே ராகுல் காந்தியை இந்திய குடியுரிமையில் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும் சுப்பிரமணிய சாமி கூறியிருந்தார். இதற்கு ராகுல் காந்தி சுப்பிரமணிய சாமியின் புகாரை பற்றி நேரடியாக குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

சேற்றை வீசுகிறார்கள்

இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி டெல்லியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:–

நான் சிறுவனாக இருந்த பருவத்தில் இருந்தே கவனித்து வருகிறேன். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் எனது பாட்டி மீதும், தந்தை மீதும், ஏன் எனது தாய் மீதும் சேற்றை வாரி வீசிவருகிறார்கள்.

நரேந்திர மோடி இப்போது இந்தியாவின் பிரதம மந்திரியாக இருக்கிறார். பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்படுகிறது. அவைகளில் எல்லாம் இம்மியளவு கூட உண்மை இல்லை.modi-rahul

சிறையில் தள்ளுங்கள்

நரேந்திர மோடி, இது உங்கள் அரசு. உங்களிடம் விசாரணை நடத்தும் அமைப்புகள் உள்ளன. என் மீது விசாரணை நடத்துங்கள். இதில் ஏதாவது நீங்கள் கண்டுபிடித்தால் என்னை சிறையில் தள்ளுங்கள்.

என் மீதும், என் குடும்பத்தின் மீதும் உங்கள் நெருங்கிய நண்பர்கள் மூலம் சேற்றை வாரி வீசுகிறீர்கள். இதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்க்கட்சியில் இல்லை. நீங்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறீர்கள்.

இதனால் எனக்கு சிறிதளவும் பயம் இல்லை. இதனால் பிரதமர் மோடி மீதான எனது தாக்குதலை திரும்ப பெறப்போவதில்லை. நான் ஏழைகளுக்காகவும், விவசாயிகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *