Day: November 21, 2015

angusam 21/11/2015

திருச்சி  அரசு பொது மருத்துவமனையில்  பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட  திருச்சி வாசன் நகரைச் சேர்ந்த நாககன்னி சிகிச்சை பலனின்றி  கடந்த 10ம் தேதி உயிரிழந்தார். அந்த பதற்றம் அடங்குவதற்குள்ளாக ,  திருச்சி அரசு பொது மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்ட , கரூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரா என்கிற பெண்  சிகிச்சை பலனின்று நேற்று உயிரிழந்தார். தற்போது திருச்சி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு 6பேரும், சாதாரண காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று […]

angusam 21/11/2015

அரசியலில் எதிர்கட்சி தலைவராக வலம் வரும் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடைக்காமல் மக்கள் பணியில் பிஸியாக இருந்தார்.  அரசியலில் தீவிர கவனம் செலுத்திய பிறகு, நடிப்பதைக் குறைத்துக்கொண்டதாக சொல்லப்பட்ட நிலையில்  விஜயகாந்த் ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வருகிறார். விஜயகாந்த்   தான் இயக்கி  நாயகனாக  நடித்த ‘விருதகிரி’ படம் கடந்த  2010-ல் வெளிவந்தது. அதற்குப் பிறகு, தன் மகன் சண்முகபாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் மட்டும் […]

angusam 21/11/2015

ஒகேனக்கல் சோகம்! சுற்றுலாவின் போது படகுப் பயணம் என்றால்… சமீபத்தில் ஒகேனக்கலில் நிகழ்ந்த படகு விபத்து நிச்சயமாக ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் எச்சரிக்கை அலாரம் அடிக்காமல் இருக்காது! மாமனார், மாமியார், மச்சான், மச்சானின் மனைவி, அவர்களுடைய மகள் மற்றும் தன்னுடைய மகன் என்று குடும்பத்தினர் ஆறு பேரை நொடிகளில் மொத்தமாகப் பறிகொடுத்துவிட்ட சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், அந்த `திக்திக்’ நொடியின் பிடியிலிருந்து இன்னமும் மீளவில்லை. இந்தக் கோரவிபத்தில் தன்னுடன் சேர்ந்து உயிர் தப்பிய மனைவி கோமதி, மகன் சச்சின் […]

angusam 21/11/2015

சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும். காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை […]

angusam 21/11/2015

தமிழகத்தில் பெய்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள  இவ்வளவு இழப்புகளுக்கு  காரணம்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறைகள் மேற்கொள்ளப்படாததே என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கனமழையால், சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பலபகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒருவார காலமாக சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த மழையின் காரணமாக தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், சேலையூர், பல்லாவரம், மப்பேடு, அகரம்தென், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், வண்டலூர், […]

tomscratch20042007 21/11/2015

இரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் இரவில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். தவிர இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர் அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது. மேலும் உடல் நலத்துக்கும் தீங்கானது.  செரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆஜீரணக் கோளாறில் இருந்து […]

tomscratch20042007 21/11/2015

           எல்.ஐ.சி என்ற பொதுத்துறை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5066 பயிற்சி விரிவாக்க அலுவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசியாகும்.                 மொத்த காலியிடங்கள்: 5066 பணியின் பெயர்: அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர் மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 1. தெற்கு மண்டலம் (சென்னை) – 679 2. தெற்கு மத்திய மண்லம் (ஹைதராபாத்) – 699 […]

tomscratch20042007 21/11/2015

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பெருமளவில் இந்திய தொழிலாளர்களை குறிப்பாக தமிழக தொழிலாளர்களை பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது. இந்நிறுவனத்தின் செயலாக்கத்தினை மேலும் பரவலாக்கும் பொருட்டு வெளிநாட்டிற்கு பெருமளவில் தொழிலாளர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. எனவே, வெளிநாட்டின் வேலையளிப்போரிடமிருந்து பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பெற்றுத் தருவதுடன் இந்திய தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான நடைமுறைகள் அறிந்த ஆலோசகர்கள் (ஸ்ரீர்ய்ள்ன்ப்ற்ஹய்ற்) தேவைப்படுகிறார்கள். ஆலோசகர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான விரிவான விதிமுறைகள் அடங்கிய விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீம்ஹய்ல்ர்ஜ்ங்ழ்.ஸ்ரீர்ம் […]

angusam 21/11/2015

காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையைச் சேர்ந்த 31 வயதே ஆன ராணுவ மேஜர் முகுந்த், 27-ந் தேதி சென்னைக்குத் திரும்பினார்… உயிரை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டு, சடலமாக. காஷ்மீர் மாநில சோபியன் மாவட்டத்தில் இருக்கும் ராணுவ கேம்ப்பில், 44-வது ராஷ்ட்ரிய துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்களில் மேஜர் முகுந்த்தும் ஒருவர். 25-ந் தேதி காலை பெங்களூரில் இருக்கும் தனது காதல் மனைவி இந்துவைத் தொடர்பு கொண்ட முகுந்த், “”கேம்ப்ல இருக்கோம். […]

angusam 21/11/2015

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஆந்திரா வங்கி முக்கியமான ஒரு வங்கியாகும். கடந்த 1923லேயே நிறுவப்பட்ட ஆந்திரா வங்கி பின்னர் பொதுவுடைமையாக்கப்பட்டது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் இருக்கின்றன. இந்த வங்கியும், கல்வித் துறையில் பிரசித்தி பெற்ற மனிபல் பல்கலைக் கழகமும் இணைந்து வங்கி மற்றும் நிதித்துறை முதுநிலை டிப்ளமோ படிப்புடன் கூடிய பணிவாய்ப்பை வழங்குவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் ஆந்திரா வங்கியின் புரொபேஷனரி அதிகாரியாக பணி நியமனம் பெற முடியும் […]

angusam 21/11/2015

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 17 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Plant Engineer (Mechanical) காலியிடங்கள்: 02 பணி: Plant Engineer (Electrical) காலியிடங்கள்: 02 பணி: Plant Engineer (Electrical) (For AC & Refrigeration) காலியிடங்கள்: 01 பணி: Assistant Manager […]