மழையில் போராட்டம் நடத்திய திருச்சி காங்கிரஸ் பெண் கவுன்சிலர்!

மழையில் கவுன்சிலர்தன்னுடைய வார்டில் அடிப்படை வசதி செய்து தர, மாநகராட்சி அதிகாரி மறுப்பதைக் கண்டித்தும், மாநகராட்சி கமிஷனரின் மெத்தன போக்கை கண்டித்தும், திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன், காங்கிரஸ் பெண் கவுன்சிலர், தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி, 44வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ஹேமா. இவர் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார். இவர் நேற்று காலை மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமியை சந்தித்து, மாநகராட்சியின் ஜெ.இ.,யாக இருக்கும் ரவீந்திரன், தன்னுடைய வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தரமாலும், குடிநீர் விநியோகம் செய்வதில் பாரபட்சமும் காட்டி வருகிறார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட கமிஷனர் விஜயலட்சுமி, கவுன்சிலருக்கு உரிய மரியாதை கொடுக்காமல் மெத்தனமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர் ஹேமா, மாநகராட்சி அலுவலக வாசலுக்கு வந்த அவர், மதியம், 12 மணிக்கு மாநகராட்சி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலை முன், தன் கோரிக்கையை வலியுறுத்தி தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன், அவரது வார்டைச் சேர்ந்த சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த மாநாகராட்சி செயற்பொறியாளர் பாலகுரு, உதவி கமிஷனர் அமுதவள்ளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

IMG_4141ஆனால், ‘கமிஷனர் வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவேன்’ என, ?ஹமா உறுதியாக கூறினார். போராட்டம், 3 மணி வரை தொடர்ந்த நிலையில் திடீரென மழை கொட்டியது. கவுன்சிலர் கொட்டும் மழையிலும் தரையில் உட்கார்ந்து போராட்டத்தைச் தொடர்ந்தார். இதைக்கேள்விபட்ட கமிஷனர் விஜயலட்சுமி நேரில் வந்து, ‘விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்ததால், கவுன்சிலர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இது சம்மந்தமாக  கவுன்சிலர் ஹேமா கூறியதாவது: என் வார்டில், ஜெ.இ.,யாக இருக்கும் ரவீந்திரன் என்பவர், கடந்த மூன்று மாதங்களாக, வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கிறார். இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குடிநீர் விநியோகத்தில் கூட பாரபட்சம் காட்டுகிறார். ஏற்கனவே அவர் இப்படி நடந்து கொண்டதால் தான், என்னுடைய புகாரில் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் இங்கேயே பணிக்கு வந்து, பழிவாங்கும் போக்குடன் செயல்படுகிறார். என்னுடைய புகாரை வாங்கிய கமிஷனரும் அலட்சியமாக நடந்து கொண்டதால் தான் போராட்டத்தில் ஈடுபட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *