Day: November 27, 2015

angusam 27/11/2015

திருச்சி  ராம்ஜி நகர் திருடர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளதாகவும், இதை வைத்து நபர்களை கடத்தி பணம் பறிப்பதாகவும், அந்த வகையில் தான் கடத்தி விடுவிக்கப்பட்டதாக கூறி அமர்நாதன்  என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது அதிர்ச்சி ரகம். திருச்சி ராம்ஜி நகர் தனம் என்பவர்,  ‘எனது மகன் அமர்நாதன், கடந்த நவம்பர் 1 ல் மாயமானார்.  எனது மகனை கண்டுபிடித்து தருவதில் மெத்தனம் காட்டுகிறார்கள் எனவே ராம்ஜி நகர் போலீசார், எனது மகனை ஆஜர்படுத்த […]

samaraiqi4273 27/11/2015

திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு சிபிசிஐடி காவ்லதுறையினருக்கு மாற்றப்படுவதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர்  சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து சைலேஷ் குமார் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அந்த வழக்கு தொடர்பாக அனைவரும் கைது செய்யப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. ஆனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக தனியாக […]

angusam 27/11/2015

‘என்னை கவர்ச்சியாக படம் எடுத்து மிரட்டினார்கள்’’ என்று படக்குழுவினர் மீது நடிகை  புகார் கூறி உள்ளார்.மோதல்கள்கதாநாயகிகள், டைரக் டர்கள் மோதல் அவ்வப்போது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. ‘மிருகம் படப்பிடிப்பில் டைரக்டர் சாமி தனது கன்னத்தில் அறைந்ததாக நடிகை பத்மபிரியா அழுது பிரச்சினையை கிளப்பி அவர் மீது நடவடிக்கை எடுக்க வைத்தார். ‘நய்யாண்டி’ படத்தில் தனுசுடன் நடித்தபோது டைரக்டர் தனது இடுப்பை ஆபாசமாக படம் எடுத்து விட்டதாக நடிகை நஸ்ரியா சர்ச்சையை கிளப்பி ஆவேசப்பட்டார். […]

angusam 27/11/2015

தே.மு.தி.க.வினர் ஊர்வலம் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நேற்று காலை மழை வெள்ளத்தால் ரேஷன் கார்டுகளை இழந்தவர்களுக்கு ரேஷன் கார்டு நகல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மண்டல அலுவலக வாசலில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஆலந்தூரில் மழையால் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மண்டல அலுவலரிடம் மனு கொடுப்பதற்காக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் பகுதி செயலாளர் நாராயணன் உள்பட […]

angusam 27/11/2015

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பணியாற்றும் அரசு பி.ஆர்.ஓ-க்களை நியமிப்பதும் மாற்றுவதும் செய்தித் துறைதான். ஆனால், தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அண்ணாவை பந்தாடியிருக்கிறார் திருநெல்வேலி கலெக்டர் கருணாகரன். மாவட்டத்தின் அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்துதான் அதிரடி பாய்ந்தி ருக்கிறது. இதுபற்றி பேசிய பி.ஆர்.ஓ அலுவலக ஊழியர்கள், ‘‘தி.மு.க ஆட்சியில் பணியில் சேர்ந்தவர் அண்ணா. மு.க.அழகிரிக்கு நெருக்கமானவர். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்டம் போட்டார். தி.மு.க. ஆட்சியில்  அமைச்சராக  இருந்த  பெரியகருப்பனிடம் பி.ஏ.வாகவும் பணியாற்றினார். […]

angusam 27/11/2015

இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட நாளில் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று பல்வேறு விவாதங்கள் சூடாக நடந்துகொண்டிருக்கு பிரதர் மோடி தூங்கி வழிந்தது இப்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி மசோதா, பீகாரில் பிஜேபி படுதோல்வி உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. நேற்று காலை 11 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கிய உடன் லோக்சபாவில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். மறைந்த உறுப்பினர்களுக்கு லோக்சபா, ராஜ்யசபா ஆகிய […]

angusam 27/11/2015

மதியம் 3 மணி வாக்கில் பார்சலோனா நகருக்கு வந்து விட்டேன் . நல்ல பசி. நான் தங்கி இருக்கும் மான்ட்டே கார்லோ (Monte Carlo) விடுதியில் இருந்து (லசு ராம்ப‌லசு வீதி) அருகில் இருக்கும் இடத்திற்கு அப்படியே உலா போகலாம் என நடக்க ஆரம்பித்தேன். நகரம் முழுக்க சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. நிறைய எழுதலாம் ஆனால் நேரம் பத்தாது என நினைக்கிறேன். அவ்வளவு அதி அற்புதமான நகரம் இது.முடிந்த வரை முகநூலில் பகிர நினைக்கிறேன். பார்சலோனா […]