angusam 29/11/2015

unnamed (2)மகிளாகாங்கிரஸ் தலைவர் விஜயதாரணி எம்.எல்.ஏவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரில் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. காங்கிரஸில் இப்போது கோஷ்டி பூசல் அதிகரித்துள்ள நிலையில் எந்த நேரம் எதுவும் நடக்கும் என எல்லோரும் எதிர்நோக்கிக்கொண்டிருக்கும்போது விஜயதாரணியையே கட்சியில் இருந்து நீக்கனும் என இளங்கோவனுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் உள்ள 49காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் அறிக்கை வெளியிடுள்ளனர்.

கூட்டறிக்கை வெளியிட்டுள்ள 61 மாவட்டங்களில் 49 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் பெயர் பட்டியல்:

 1. ஆர். மனோ – வடசென்னை

 1. என்.ரங்கபாஷ்யம் – மத்தியசென்னை

 1. வி.ஆர்.சிவராமன் – காஞ்சி வடக்கு

 1. ஆர்.சுந்தரமூர்த்தி – காஞ்சி தெற்கு

 1. பி.ஜேம்ஸ் – திருவள்ளூர் தெற்கு

 1. ஏ.ஜி.சிதம்பரம் – திருவள்ளூர் வடக்கு

 1. டீ.குலாம் மொய்தீன் – விழுப்புரம் வடக்கு

 1. ஏன். தனபால் – விழுப்புரம் தெற்கு

 1. ஏம்.என். விஜயசுந்தரம் – கடலூர் தெற்கு

 1. செங்கம் குமார் – திருவண்ணாமலை தெற்கு

 1. பி.டீக்காராமன் – வேலூர் மாநகர்

 1. சி.பஞ்சாட்சரம் – வேலூர் கிழக்க

 1. பாலவரதன் – வேலூர் மேற்கு

 1. ராஜாராம் வர்மா – தர்மபுரி

 1. மேகநாதன் – சேலம் மாநகர்

 1. பெரியசாமி – சேலம் கிழக்கு

 1. ஏ.என்.முருகன் – சேலம் மேற்கு

 1. செழியன் – நாமக்கல்

 1. இ.பி. ரவி – ஈரோடு மாநகர்

 1. எஸ்.வி. சரவணன் – ஈரோடு வடக்கு

 1. சி.காந்தி – ஈரோடு தெற்கு

 1. ஆர். கிருஷ்ணன் – திருப்பூர்

 1. வி.எம்.சி. மனோகரன் – கோவை மாநகர்

 1. எஸ்.மகேஷ்குமார் – கோவை புறநகர்

 1. கணேஷ் – நீலகிரி

 1. பேங்க் சுப்ரமணியம் – கரூர்

 1. முருகேசன் – தேனி

 1. தங்கராஜ் – மதுரை மாநகர்

 1. ஜெயராமன் – மதுரை தெற்கு

 1. குட்லக் ராஜேந்திரன் – ராமநாதபுரம்

 1. அப்துல்கனி ராஜா – திண்டுக்கல் கிழக்கு

 1. சிவசக்திவேல் – திண்டுக்கல் மேற்கு

 1. ஜெரோம் ஆரோக்யராஜ் – திருச்சி மாநகர்

 1. ஜெயப்பிரகாஷ் – திருச்சி வடக்கு

 1. தமிழ்செல்வன் – பெரம்பலூர்

 1. ராஜேந்திரன் – அரியலூர்

 1. டி.ஆர்.லோகநாதன் – தஞ்சாவூர் வடக்கு

 1. ராஜ்குமார் – நாகை வடக்கு

 1. துரைவேலன் – திருவாரூர்

 1. ஏ.டி.எஸ்.அருள் – தூத்துக்குடி மாநகர்

 1. காமராஜ் – தூத்துக்குடி மேற்கு

 1. சிவசுப்ரமணியம் – தூத்துக்குடி வடக்கு

 1. ராம்நாத் – நெல்லை மாநகர்

 1. தமிழ்செல்வன் – நெல்லை கிழக்கு

 1. காமராஜ் – நெல்லை மேற்கு

 1. பாலையா – கன்யாகுமரி கிழக்கு

 1. அசோக் சாலமன் – கன்யாகுமரி மேற்கு

 1. வேலாயுதம் – விருதுநகர்

 1. ராஜேந்திரன் – தஞ்சை மாநகர்

இந்த குழு அளித்துள்ள  அறிக்கையில்,

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு இழந்த பெருமையை மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் நவம்பர் 1. 2014 அன்று நியமிக்கப்பட்டார்.

கடந்த ஓராண்டு காலமாக காங்கிரஸ் இயக்கத்திற்கு புத்துணர்ச்சி வழங்கி வலிமையை ஏற்படுத்துகிற வகையில் பல்வேறு கட்சி நடவடிக்கைகளை ஓய்வுவின்றி தொடர்ந்து செய்து வருகிறார். தமது முழு சக்தியையும் பயன்படுத்தி இயக்கப் பணியாற்றி வருகிற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் மீது பல்வேறு அவதூறு வழக்குகளைத் தொடுத்து கடுமையான அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டு வருகின்றன. இவற்றை எதிர்கொள்வதில் தமிழக காங்கிரஸ் கட்சி என்றுமே தயங்கியதில்லை. ஆனால்,  காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயே தொண்டர்கள் செல்வாக்கு இல்லாத ஒருசிலர் தலைவர் இளங்கோவன் அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி கட்சியை இழிவுபடுத்துகிற பணியை தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி. விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர் இளங்கோவன் அவர்களிடம் முறையிட்டபோது நடந்து கொண்ட முறையை எவருமே ஏற்றுக்கொள்ள முடியாது. எவர் மீதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அதற்கான புகாரை தாங்கள் வழங்கினால் பரிசீலிப்பதாக தலைவர் இளங்கோவன் கூறினார். ஆனால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அராஜகப் போக்கோடு வலியுறுத்திக் கூறியது மிகவும் வேதனைக்குரியது.

இயல்பாகவே எவரையும் துச்சமென நினைத்து மதிக்காத ஆணவப்போக்கு கொண்டு விஜயதாரணி கட்சிக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் செயல்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது.மேற்கூறப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் பேசாததை எல்லாம் பேசியதாக இட்டுக்கட்டி மகிளா காங்கிரசைச் சேர்ந்த சாந்தி ஸ்ரீனி, மானஸா பாத்திமா ஆகியோர் காவல்நிலையத்திற்குச் சென்று கிரிமினல் புகார் கொடுத்ததைவிட கட்சிவிரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தலைவர் இளங்கோவன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் மூலமாக கட்சிக்குள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்னைகளை காவல்துறையை நாடியதன் மூலம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பித்தவர்கள் மீது காங்கிரஸ் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணின விடுதலைக்காப் பாடுபட்ட பெரியாரின் பாரம்பரியத்தில் வந்த தலைவர் இளங்கோவன் பெண்ணினத்தை இழிவுபடுத்தினார் என்று சொல்வதை விட அப்பட்டமான அவதூறு வேறு இருக்க முடியாது. எதற்கும் கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிற விஜயதாரணியை மகிளா காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டும்.

காங்கிரஸ் இயக்கத்தின் கலாச்சாரத்திற்கு இழுக்கு தேடுகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டுவருகிற விஜயதாரணி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமே தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக ஆகிவிடுமோ என்ற அச்சம் மேலோங்கி இருக்கிறது. கடந்த ஓராண்டு காலமாக கட்சி வளர்ச்சிக்காக செய்த உழைப்புகள் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிடுமோ என்ற கவலை அனைவருக்கும் இருக்கிறது.

எனவே, தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரசில் நிலவி வருகிற ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு காரணமான விஜயதாரணி உள்ளிட்டவர்கள் மீது உடனடியக நடவடிக்கை எடுத்து கட்சியில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களாகிய நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன்,

சத்தியமூர்த்தி பவனில் நேற்று (27–ந் தேதி) நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும். நான் எனது அறையில் வெளியூர் நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது விஜயதரணி எம்.எல்.ஏ. சத்தம் போட்டபடியே அறைக்குள் வந்தார். அதை பார்த்ததும் எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம். அமைதியாக பேசுங்கள் என்றேன். ஆனால், அதை கேட்காமல் தொடர்ந்து சத்தம்போட்டார். உடனே நான் அறையை விட்டு வெளியே போங்கள் என்றேன். அவர் வெளியே செல்ல முடியாது என்று அறைக்குள் அமர்ந்துகொண்டார். உடனே நான் வெளியே சென்றுவிட்டேன். நடந்தது இவ்வளவு தான். வெளியில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது.ஆனால், வேண்டும் என்றே போலீஸ் நிலையம் சென்று என் மீது அவர் பொய் புகார் கொடுத்துள்ளார். இப்போதும் டெல்லியில் புகார் கொடுக்க சென்றுள்ளார். என் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. அதில் இதுவும் ஒன்று. வழக்கை சட்டப்படி சந்திப்பேன். நடந்த சம்பவம் பற்றி இதுவரை கட்சி மேலிடம் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. சோனியாகாந்தி கேட்டால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன் என்றார்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*