Month: November 2015

angusam 07/11/2015

கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இடுக்கி மாவட்டம் பீர்மேடு 1 வது வார்டில் போட்டியிட்ட அஇஅதிமுக வேட்பாளர் பிரவீணா 172 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார் . பதிவான வாக்குகள் 813 ADMK : 416 கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாலதி பெற்ற வாக்குகள் : 243 காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பெற்ற வாக்குகள் 154 கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 6 பேர் வெற்றி பெற்றிருப்பது அதிமுக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் […]

angusam 06/11/2015

நடிகர் விஷாலின் உருவபொம்மை எரித்த 50 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையான தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உதாசீனப்படுத்தி பேசியதற்கு நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும், உடனடியாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும், காவிரி நதி நீர் பிரசனைக்கு தென்னிந்திய […]

angusam 06/11/2015

சோனி எக்ஸ்பீரியா Z5, எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் சோனி நிறுவனம் அக்டோபர் 21ம் தேதி நிகழ்வு ஒன்றில், பிரீமியம் வரம்பிலான எக்ஸ்பீரியா Z5 டூயல், எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் டூயல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்திய சந்தையில் வெளிக்கொண்டுவரப்படாத புதிய எக்ஸ்பீரியா சாதங்களை இந்நிகழ்வில் பார்க்கலாம் என்று நிறுவனம் அழைப்பு விடுத்து உறுதிபடுத்தியுள்ளது. இந்த புதிய முன்னணி ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சமாக, சோனியில் கேமராவை மேம்படுத்தப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா Z5 ஸ்மார்ட்போனில் ஒரு பிராண்ட் புதிய 1/2.3 […]

angusam 06/11/2015

டெல்லிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுக்களைக்  கொல்லவும், மாட்டிறைச்சி விற்கவும் தடை விதிக்க வேண்டி தொடரப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது. “டெல்லிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுக்களைக்  கொல்லவும், மாட்டிறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும். மேலும், வயதான பசுக்கள், எருமை மற்றும் எருதுகளைப்  பராமரிக்க தனியாக கோசாலைகளை அமைக்கும்படி டெல்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று சுவாமி சத்யானந்தா சக்ரதாரி என்பவர்,  டெல்லி உயர் நீதிமன்றத்தில்  பொதுநல மனு ஒன்றை தாக்கல் […]

angusam 06/11/2015

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக பாஜகவின் மேலிட பார்வையாளர் முரளிதரராவ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி சேரக் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல, ஆனால், அதிமுகவுடன் கூட்டணி இல்லை. பாமகவும், தேமுதிகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முழுமையாக விலகி செல்லவில்லை. ஆனால், அவர்கள் விடுக்கும் அறிக்கையை வைத்து அவர்களின் நிலைப்பாட்டை கணிக்க முடியவில்லை. எப்போதுமே எதிர்மறையான கொள்கையுடன் அறிக்கை வெளியிடுகிறார்கள். அதைவைத்து இறுதி முடிவு எடுத்துவிட […]

angusam 06/11/2015

புதிய வகையில் சுவையான காபி தற்போது பாரிசில் கிடைத்து வருகிறது. இந்த சுவைக்கு காரணம் ரோபஸ்டா பீன்ஸ் ஆகும். இந்த வகை சுவையுள்ள காபி கொட்டைகள் தெற்கு சூடானில் இருந்துதான் வந்து கொண்டு இருக்கிறது. ஜரோப்பிய நாடுகளிலேயே தெற்கு சூடான்தான் மிகச் சுவையான காபி கொட்டையினை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது கண்டறியப்பட்ட  சுவையான காபி நெஸ்பிரஸோ மூலம் தெற்கு சூடான் சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தெற்கு சூடானில் நெஸ்பிரஸோ மிகப்பெரிய காபி உற்பத்தி […]

angusam 06/11/2015

உடல்நிலை சரியில்லாத மற்றும் காயமடைந்த யானைகளுக்கு கேரளாவில் விரைவில் ‘ஆம்புலன்ஸ்’ சேவை. முதல் முறையாக, மாநில வனத்துறை விலங்குகளுக்காக ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளது.  இது வட கேரளாவில் உள்ள வயநாடு வனவிலங்கு சரணாலயத்தில் (WWS) உள்ள யானைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் மாற்றியமைக்கப்பட்ட லாரி வடிவில் உள்ளது. இது காயமடைந்த மற்றும் உடல்நிலை சரியில்லாத யானைகளுக்காக, அவசர நேரத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு யானைகளை மாற்றும் போக்குவரத்துக்கு இந்த ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படும் என்று வனத்துறை […]

angusam 06/11/2015

செவ்வாய் கிரகத்தில் துருவ கரடி இருப்பதற்கான புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மனிதர்கள் அங்கு வசிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்று அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான “நாசா”, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கியுள்ளது. இந்த கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படத்தை வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு […]

angusam 05/11/2015

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தமன்னா. கேடி’ படம் மூலம் 2005ல் தமன்னா அறிமுகமானார். கல்லூரி படம் பிரபலபடுத்தியது. தனுஷ், பரத் ஜோடியாக நடித்தார். சூர்யா ஜோடியாக நடித்த “அயன்” படம் முன்னணி நடிகை அந்தஸ்தை உயர்த்தியது. கார்த்தியுடன் நடித்த ‘பையா; படம் ஹிட்டானதால் மார்க்கெட் இன்னும் உயர்ந்தது. தொடர்ந்து சிறுத்தை, சுறா, வேங்கை, படங்களில் நடித்தார். இடையில் படங்கள் குறைய தொடங்கியது. பிறகு சமீபத்தில்  தமன்னா நடிப்பில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ […]

angusam 05/11/2015

சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டுக்கு நள்ளிரவில் சென்றோம். திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி அது. அடர்ந்த இருள். எங்கோ நாய் விட்டு விட்டுக் குரைத்துக் கொண்டிருந்தது. சுடுகாட்டு முகப்பை நெருங்கும் போது “”ஓம்… ரீம்… க்ரீம்…” என்ற குரல், தகரத்தை சாலையில் தேய்ப்பதுபோல் கரடு முரடாய் ஒலிக்க, அதை அப்படியே எதிரொலித்தன இன்னும் சில குரல்கள். அப்போது மணி நள்ளிரவு 12.05. மெல்ல சுடுகாட்டுக்குள் அடியெடுத்து வைத்தோம். தூரத்தில் ஏதோ நெருப்பு வெளிச்சம் லேசாய்த் தென்பட, அதனைச் சுற்றி மசங்கலாய் […]

angusam 04/11/2015

ரஜினிகாந்துடன் எந்திரன் 2 படத்தில் இணைந்து நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் நான் சொல்லும் கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொண்டால் தான் உள்ளே வருவேன் என்று அர்னால்டு வெளியே நின்று கொண்டிருக்கிறார். எந்திரன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் 2 வது பாகத்தை முன்பைவிட பிரமாண்டமாகவும், அதிக பொருட்செலவிலும் எடுக்கும் முயற்சியில் ஷங்கர் இறங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக ஹாலிவுட் அர்னால்டும் நடிக்கவிருக்கின்றனர். […]

angusam 01/11/2015

அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது `எப்படி வாழ்ந்த குடும்பம்’ என்று ஒரு நிமிடம் உடம்பை உலுக்கிப் போட்டது. சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் தமிழ்த்திரை மற்றும் இசையுலகின் ஏகபோக சக்கரவர்த்தியாக ஒரு காலத்தில் ராஜாங்கம் நடத்திய எம்.கே. தியாகராஜ பாகவதரின் மனைவி, வாழ்க்கை யோடு போராடிக் கொண்டிருக்கிறார்! ஒரே ஒரு சிறிய ரூம், இரண்டாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் கெரசின் ஸ்டவ் அடுப்பும் சில பாத்திரங்களும் இறைந்து கிடக்கின்றன. தடுப்புக்குப் […]