samaraiqi4273 04/12/2015

8b5c0e37-2d25-4186-b6fe-e977d372aadc_S_secvpfசென்னை மணப்பாக்கத்தில் மியாட் தனியார் மருத்துவமனை உள்ளது.

அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 100 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வந்தது.

சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக மணப்பாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மியாட் மருத்துவமனைக்கு மின்சாரம் கிடைக்கவில்லை.

இதையடுத்து மருத்துவமனையின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஜெனரேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசத்துக்கான வெண்டிலேட்டர் கருவிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.health-chennai1

இந்த நிலையில் நேற்றிரவு யாரும் எதிர்பாராத வகையில் ஜெனரேட்டர் அறைக்குள் மழை நீர் புகுந்தது. வெள்ளம் போல திரண்டு வந்த தண்ணீரால் ஜெனரேட்டர் இயங்குவது நின்று போனது. இதனால் ஜெனரேட்டர் மூலம் மருத்துவமனை சிகிச்சை அறைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இன்டன்சிவ் கேர் யூனிட் எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் செயற்கை சுவாசம் பெற்று வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். வெண்டிலேட்டர் துணை இல்லாததால் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

சுவாசம் பெற முடியாத காரணத்தால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் ஒவ்வொருவராக உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று காலை வரை அடுத்தடுத்து 18 நோயாளிகள் உயிரிழந்தனர்.

அவர்களில் 16 பேர் யார்–யார் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–

1. சொக்கலிங்கம், வளசர வாக்கம்.

2. கணேசன் (28), மேற்கு மாம்பலம்.

3. பச்சையம்மாள், வேலூர்.

4. ரத்தினராஜ், வியாசர்பாடி.

5. கலையரசன் (52), அண்ணனூர்.

6. தாமஸ் (80)

7. விசாலாட்சி (79)

8. செல்லியம்மாள் (60)

9. சண்முகம் (82)

10. நெல்சன்

11. ரகுபதி ராஜு (63)

12. ஜெரோம் (28)

13. மோகன்

14. வடிவேல் (38)

15. ரத்தினம்மாள்.

16. பரஞ்ஜோதி (53).

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*