samaraiqi4273 08/12/2015

CVsudLaXIAA9uF2

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும் பாலான மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டாலும் தமிழகத்தின் மிக முக்கியமான நகரமாக விளங்கும் சென்னை பாதிப்படைந்தது. லட்ச கணக்கான மக்கள் உதவுவற்க்கு மனிதர்கள் இல்லாமல் தங்களை தாங்கனே காப்பாற்றி கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய நாட்டின் பிரதமர் மோடி தமிழகத்திற்க்கு வருகை தந்து சென்னையை மட்டும் சுமார் 40 நிமிடங்கள் ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்த்தார். அவருடன் தமிழக முதல்வரும் சுற்றி பார்த்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகத்திற்க்கு வருகை தந்தது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகமாக பாதிக்கப்பட்டதும், முதன் முதலாக பாதிக்கப்பட்ட இடமும்மான கடலூர் மாவட்டத்தில் பிரதமரும், தமிழக முதல்வரும் பார்வையிட வராத நிலையில் ராகுல்காந்தி கடலூர் மாவட்டத்தில் உள்ள இடங்களை பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டதோடு, பள்ளிகளுக்கு சென்று மாணவர்களின் நிலை அறிந்தார்.

இந்த நிகழ்வு பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதிலும் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய ராகுல் காந்தியை வயதான பெண்மனி கட்டி தழுவி தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது மக்களிடையே தங்களை காப்பாற்ற ஒருவர் வந்துவிட்டார் என்ற உணர்வை ஏற்படுத்தியதாக தெரிகிறது.IMG_20151208_170124

பொதுவாகவே தமிழகத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களை நன்றியோடு நினைவு கூறும் உள்ளம் படைத்தவர்கள், என்பதை இந்த நிகழ்வு நினைவூட்டும். பொதுவாகவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தால் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, மக்களை பாதுகாப்பு வளையத்திற்க்குள் வைத்திருப்பார்கள்.

அதேபோன்று முடிச்சூர் பகுதிக்கு வந்த ராகுல் காந்திக்கு பாதுகாப்பு போடப்பட்டும் அவர் பாதுகாப்பையும் மீற பள்ளி மாணவர்களை சந்தித்தார். மேலும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பையும் மீறி பொதுமக்களை சந்தித்து பேசிய இந்த அணுகுமுறை மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கடலூரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

11

மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் கடலூர் மக்களை இன்று சந்தித்து நிவாரண உதவிகளை அளித்த அவர் மேலும் கூறும்போது, “இதுபோன்ற இக்கட்டான சூழலில் மக்களின் தேவையை அறிந்து அதனை அவர்களுக்கு அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் தமிழக மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நாம் கை கொடுக்க வேண்டும்.

வெள்ள நிவாரணப் பணிகளில் அரசியல் செய்வதைவிட, பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதே நமது முதல் கடமை” என்றார் ராகுல் காந்தி.

முன்னதாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று காலை தமிழகம் வந்தடைந்தார்._RAHUL_GANDHI_2649_2649328f

சென்னை வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். ஷண்முகா நகர், ஈச்சங்காடு, கிரிமாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற அவர் அங்கிருந்த மக்களை சந்தித்து அரிசி, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

இதனை அடுத்து, மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் கடலூருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை பார்வையிட்டார்.

ஹெலிகாப்IMG_20151208_170111டர் மூலம் சென்னை வரும் அவர், மேற்கு தாம்பரம், முடிச்சூர், வில்லிவாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.

பின்னர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் வீடுகளை இழந்து தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளை புரட்டிப் போட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட இந்த மழை வெள்ள சேதத்தை பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை களத்தில் இறங்கி பார்வையிட்ட ராகுல் மக்களின் மனதில் இடம்பிடித்தார் என்பதை காங்கிரஸ் கட்சியினர் உணர்ந்தனர்

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*