Day: December 16, 2015

angusam 16/12/2015

2016-ல் இந்தியாவில் நடைபெறுகிற டி20 உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர்களாக மைக் ஹஸ்ஸியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீதரனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணி இதுவரை டி20 உலகக்கோப்பையை வெல்லவில்லை. இதுவரை நடந்த 5 போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகளே வென்றுள்ளன. இதனால் முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகிய இருவரும் டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தென் […]

angusam 16/12/2015

சமீபத்திய மழை மற்றும் வெள்ளப்பெருக்கின்போது பாதிக்கப்பட்ட பலர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை இழந்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. மேலும் தற்போது தமிழகத்தில் மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்த வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்களில் கட்டணமின்றி வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் மழை […]

tomscratch20042007 16/12/2015

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிபர்கள் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து  ரூ 16.50 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கினர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு.  சென்னை தலைமைச் செயலகத்தில்,முதல்வர் ஜெயலலிதாவை பிரபல தகவல் தொழில்நுட்ப அதிபர்கள்  நேற்று சந்தித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 16.5o நிதி உதவியாக வழங்கினர்.  தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண […]

tomscratch20042007 16/12/2015

மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பார்வை குறைபாடு மற்றும் கேட்டல் சிறப்பு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   பணி: SECONDARY GRADE TEACHER (Schools for  the Deaf) காலியிடங்கள்: 31 சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.2800 வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும். […]

tomscratch20042007 16/12/2015

ஆஸ்திரேலியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக வீசிய சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. பல இடங்களில் மின் இணைப்புகள்  துண்டிக்கபட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்ததால் வீடுகள்,கார்கள் பலத்த சேதம் அடைந்துள்ளது. ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் ஒரு கிரிக்கெட் பந்தின் அளவில் விழுந்ததால் மக்கள் பீதியுடன் சத்தமிட்டப்படி ஓடினர். சிட்னியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானமும் புறப்பட்டு செல்லும்  விமான சேவையையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிட்னி நகரில் இன்று […]

samaraiqi4273 16/12/2015

தமிழகத்தை புரட்டிபோட்ட கனமழையானது தன்னுடைய கோபத்தையும், கோர முகத்தையும் கடலூர்,சென்னை,உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களில் வெள்ளப்பெருக்காக காட்டியதால் பல லட்சம் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. அதில் பலர் இறந்தும், காணாமலும் போனார்கள் பலர் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் மறைந்தும் போனார்கள். இப்படிபட்ட நேரத்தில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் மக்கள் தங்களால் இயன்ற பண உதவிகளையும், பொருள் உதவிகளையும் இரவு பகல் பாராமல் வழங்கினார்கள். அதனை சரியான நேரத்தில் பல தொண்டு நிறுவனங்கள் […]

tomscratch20042007 16/12/2015

கூகுள் நிறுவனத்தின் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை தெரிவித்தார்.   தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர், இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார்.   இந்திய ரயில்வேயின் தொலைதொடர்பு பிரிவான ரயில்டெல் நிறுவனத்துடன் இன்று கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதன்படி இந்தியா முழுவதும் […]

angusam 16/12/2015

சென்னை TVS சுந்தரம் – கிளேட்டன் நிறுவனத்தில் பணியாற்ற  ஆட்கள் தேவை, DME,DAE, DEEE,ITI ஆகிய பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.            

angusam 16/12/2015

சிம்பு பாடியதாக கூறி வெளியான ‘பீப் சாங்’தான் தற்போதைய தலைப்பு செய்தி.  இதுமட்டுமல்லாமல்  இதுதான் கடந்த சில தினங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்கு எதிராக கொதித்துள்ள பெண்கள் அமைப்பினரும், மாணவர்களும் சிம்புவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். கூடவே தமிழகம் முழுவதும் சிம்பு, அனிருத் இருவர் மீதும் காவல்துறையில் பல்வேறு புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் சிம்பு மீது நடவடிக்கை எடுக்க போலீசாரும்  தீவிரமாக உள்ளனர். இந்நிலையில், இந்த பாடல் விவகாரம் குறித்து […]

angusam 16/12/2015

தம்மை இயேசுநாதராகவே நினைத்துக் கொண்டு வசனங்களை வாரி இறைத்திருக்கிறார் ஜெயலலிதா என்றும்,  இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படியே வசனம் பேசியும், கிளிசரின் போடாமல் கண்ணீர் வடித்தும் மக்களை ஏமாற்றி விடலாம் என ஜெயலலிதா நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மற்றும் புறநகர் பகுதிகளையும், கடலூர் மாவட்டத்தையும் மூழ்கடித்த மழை வெள்ளத்தில் சிக்கி அனைத்தையும் இழந்து மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் […]

angusam 16/12/2015

நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, வெள்ளநிவாரணப்பணிகள் குறித்து  பேசியுள்ள  ஆடியோ பேச்சு, வாட்ஸ்-அப் உள்ளிட்ட வலைதளங்களில் பரவி வருகிறது, அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கும் வார்த்தைகள் பயங்கர உருக்கம், அதிலும் சமீபகாலம் வரை  இது எனது அரசு எனது தலைமையிலான அரசாங்கம் என எந்த வார்த்தையும் இல்லை, அதை தவிர்த்து இது உங்கள் அரசாங்கம் என சொல்லியிருப்பதுதான் ஜெயலலிதாவின் பேச்சின் உச்சகட்டம் தொடர்ந்து  அந்த ஆடியோவை கேட்போம். வணக்கம், உங்கள் அன்பு சகோதரி […]

angusam 16/12/2015

இந்தியாவில், மேற்கு தொடர்ச்சி மலையில், கர்நாடகா மாநில பகுதியில், அதிகளவு சந்தன மரங்கள் உள்ளன. விலை உயர்ந்த, மதிப்பு கூட்டப்பட்டதாக கருதப்படும் சந்தன மரங்களின் வளர்ப்பினை ஊக்கப்படுத்திட, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில், வனத்துறையின் மூலம் சந்தனக்காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளன. நடப்பாண்டு சந்தனக்காடு வளர்ப்பு திட்டத்தில், […]

angusam 16/12/2015

தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு தமிழகத்தின் நீண்டகாலமான சமூக நீதி போராட்டத்திற்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளது. சாதி, தீண்டாமையை இந்து மத உரிமை தமிழகத்தில் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யும் உரிமையை வலியுறுத்தி கோவில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை நடத்துவதாக 1970ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் […]

angusam 16/12/2015

உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் தங்களுக்கு ஏற்படும்  நெருக்கடியில் தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை  கொடுக்கும் உத்தரவு  டார்ச்சாக மாறி அதனால்   தற்கொலை கொள்ளும் சம்பவம்  தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் என்ன செய்வது என்று அதிகாரிகள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் சென்னையில் கலெக்டர் திட்டியதால் தாசில்தார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாசில்தார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ள நிவாரண கணக்கெடுப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல பகுதிகள் மூழ்கின. இதனையடுத்து […]

angusam 16/12/2015

ஆர்வக் கோளாரின் காரணத்தால் பிறந்த குழந்தைகளை செல்போனில் படம் எடுப்போர்கள் அறியவேண்டிய எச்சரிக்கை ரிப்போர்ட் …….. *குழந்தைகளின் பெற்றோர்களும் மற்றும் குழந்தைக்காக ஏங்கி எதிர்பார்க்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லப்பட வேண்டிய செய்தி இது..! கேமிரா ப்ளாஷ் ஆன் ஆகி இருப்பதை மறந்து , பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தையை க்ளோஸ்-அப்பில் போட்டோ எடுத்துள்ளார் அக்குழந்தையின் குடும்ப நண்பர் ஒருவர், ப்ளாஷின் பாதிப்பினால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளது அக்குழந்தை..! புகைப்படம் எடுத்தப்பின் குழந்தையின் […]