angusam 16/12/2015

images (4)2016-ல் இந்தியாவில் நடைபெறுகிற டி20 உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர்களாக மைக் ஹஸ்ஸியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீதரனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலிய அணி இதுவரை டி20 உலகக்கோப்பையை வெல்லவில்லை. இதுவரை நடந்த 5 போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகளே வென்றுள்ளன.

இதனால் முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகிய இருவரும் டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி, மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதிலும் ஸ்ரீராம் ஆலோசகராகச் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராம், இந்திய அணிக்காக 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*