தேசிய கீதத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர் சேர்க்க மோடி கோரிக்கை

maxresdefaultநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் செய்தது போல் தேசிய கீதத்தில் மாற்றம் செய்யவேண்டும் என மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மாதம் சுப்பிரமணிய சுவாமி மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் “இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மன இருக்க வேண்டுமா அல்லது வந்தே மாதரம் இருக்கவேண்டுமா என்பது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து அரசியல் நிர்ணய சபை தலைவரான ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, வாக்கெடுப்பு நடத்தாமல் ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். அதேசயம் வருங்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தி தேவையான மாற்றங்களை செய்துக்கொள்ளலாம் என ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.

Subramanian-Swa10340

மேலும் ஜன கண மன பாடல் பிரிட்டிஷ் மன்னரை வரவேற்க எழுதப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பதால் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை எட்டுவது அவசியம். எனவே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ கீதத்தில் சில வார்த்தைகளை பயன்படுத்தினார். அந்த வார்த்தைகளை தேசிய கீதத்தில் இணைத்து மாற்றம் செய்யவேண்டும்.

 

95 சதவீத பாடலை அப்படியே வைத்துக்கொண்டு மீதமுள்ள 5 சதவீதத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் பெயரை சேர்க்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *