Day: December 24, 2015

samaraiqi4273 24/12/2015

திருச்சி ஸ்ரீரங்கம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது பெருமாள் தான் ஸ்ரீரங்கத்தை புண்ணியஸ்தலமாக மாற்றிய பக்தர்கள் நாளுக்கு நாள் எண்ணிகை அதிகரித்து கொண்டே செல்வதை நாம் காண முடியும். அதிலும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் வைகுண்ட ஏகாதெசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் பணம் செலுத்தி தரிசிக்க வரும் விஐபி மற்றும் விவிஐபிகளுக்கு மட்டும் பெருமாள் பல உடைகள், ஆபரணங்கள் என்று பல வடிவங்களில் அருகில் வந்து அருள் பாலித்து […]

tomscratch20042007 24/12/2015

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள மத ஆசிரியர் (Religious Teacher) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியான இந்திய ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Religious Teacher (Junior Commissioned Officer) காலியிடங்கள்: 85 துறை வாரியான காலியிடங்கள் விவரம்: 1. பண்டிட் – 74 2. கிராந்தி – 04 3. பாதிரி – 02 4. பண்டிட் (கூர்க்கா) – 01 5. மவுலவி (ஷியா) – 01 6. […]

tomscratch20042007 24/12/2015

இந்திய ரயில்வேயின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 976 பணியிடங்களுக்கான அ றிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Commercial Apprentice காலியிடங்கள்: 105 சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200 பணி: Traffic […]

tomscratch20042007 24/12/2015

அநாகரிகம் தான் இந்திய அரசியலின் புதிய வடிவமா? என்று கேள்வி எழுப்பியுள்ள நிதி மந்திரி அருண் ஜெட்லி, அப்படி என்றால் அதன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார். பாராளுமன்ற செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளத்தில் அருண் ஜெட்லி சிறிய கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த கட்டுரையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு கடந்த இரண்டு கூட்டத்தொடரிலும் பாராளுமன்றத்தை நடத்தவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது என்று […]

angusam 24/12/2015

தி.மு.கவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம் நீங்களும் வாருங்கள் என்று தம்மை சந்தித்த வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஆலோசனை கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளாராம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்தை கடந்த வாரம் சந்தித்தனர். எப்படியும் விஜயகாந்த்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தக்க வைத்து கொள்ளலாம் என்பது அவர்களது கணக்கு. ஆனால் விஜயகாந்த் தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் […]

tomscratch20042007 24/12/2015

வரதட்சணை கொடுமை செய்வதாக கணவர், மாமியார் மீது புகார் தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   சேலம் அருகே சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 28). இவருக்கும், வாழப்பாடி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்த கணேசன் (55) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புரோக்கர் மூலம் பெண் பார்க்கப்பட்டு கணேசனுக்கும், சாந்திக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு பிறகு […]

angusam 24/12/2015

நடிகர் சிம்பு – அனிருத் கூட்டணியில் சிம்பு பாடிய ‘பீப் பாடல்’ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.  இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சிம்புவை கைது செய்ய […]

tomscratch20042007 24/12/2015

துறையூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டார். புலிவலத்தையடுத்த மூவானூர் எடத்தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் (26). ஜேசிபி டிரைவர். இவருக்கும் குளித்தலை அடுத்த கோவில்பட்டியை சேர்ந்த நந்தினி(22) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மனைவி மீது சந்தேகப்பட்டு ரெங்கராஜ் அடிக்கடி தகராறு செய்துள்ளார். கடந்த 4 தினங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறின்போது, நந்தினியை திட்டிவிட்டு ரெங்கராஜ் வெளியே சென்றுவிட்டார். வேதனையில் இருந்த நந்தினி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அருகில் […]