tomscratch20042007 24/12/2015

அநாகரிகம் தான் இந்திய அரசியலின் புதிய வடிவமா? என்று கேள்வி எழுப்பியுள்ள நிதி மந்திரி அருண் ஜெட்லி, அப்படி என்றால் அதன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

பாராளுமன்ற arun-jaitley2_505_092613080111_012014094651செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளத்தில் அருண் ஜெட்லி சிறிய கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த கட்டுரையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு கடந்த இரண்டு கூட்டத்தொடரிலும் பாராளுமன்றத்தை நடத்தவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க., தலைவர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் கட்சியே பாராட்டக் கூடிய வகையில் இல்லை. அவ்வாறு தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பவர்களுக்கு கட்சியின் தலைவர் ஆலோசனை வழங்கினார். மேலும் கருத்துக்களை முறைப்படுத்தி வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார் என ஜெட்லி கூறியுள்ளார்.

டெல்லி முதல்-மந்திரி அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்ட போது பிரதமர் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்த கருத்தினை சுட்டிக் காட்டிய அவர், முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.

மேலும், “இந்திய அரசில் உள்ள ஒருவர் கெஜ்ரிவாலை போன்று கருத்து தெரிவித்தால், அது தேசிய அளவிலான சீர்கேட்டிற்கு அடையாளமாக மாறிவிடும்” என்றும் வலியுறுத்தினார்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*