Year: 2015

tomscratch20042007 24/12/2015

வரதட்சணை கொடுமை செய்வதாக கணவர், மாமியார் மீது புகார் தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   சேலம் அருகே சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 28). இவருக்கும், வாழப்பாடி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்த கணேசன் (55) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புரோக்கர் மூலம் பெண் பார்க்கப்பட்டு கணேசனுக்கும், சாந்திக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு பிறகு […]

angusam 24/12/2015

நடிகர் சிம்பு – அனிருத் கூட்டணியில் சிம்பு பாடிய ‘பீப் பாடல்’ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.  இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சிம்புவை கைது செய்ய […]

tomscratch20042007 24/12/2015

துறையூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டார். புலிவலத்தையடுத்த மூவானூர் எடத்தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் (26). ஜேசிபி டிரைவர். இவருக்கும் குளித்தலை அடுத்த கோவில்பட்டியை சேர்ந்த நந்தினி(22) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மனைவி மீது சந்தேகப்பட்டு ரெங்கராஜ் அடிக்கடி தகராறு செய்துள்ளார். கடந்த 4 தினங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறின்போது, நந்தினியை திட்டிவிட்டு ரெங்கராஜ் வெளியே சென்றுவிட்டார். வேதனையில் இருந்த நந்தினி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அருகில் […]

tomscratch20042007 23/12/2015

தனது இணையதளம் மூலம் ரெயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கு இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(IRCTC) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில், இந்த வசதியைப் பயன்படுத்துபவர்கள் முதலில் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணையதளத்திலும் ஒரு முறை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர் மட்டுமல்லாது, மற்ற […]

tomscratch20042007 23/12/2015

ஜிஎஸ்டி மசோதா உட்பட முக்கிய மசோதாக்கள் நிறைவேறாமல் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்றுடன் முடிந்தது.  மக்களவையின்  குளிர் கால கூட்டத் தொடர் மொத்தம் 20 நாட்கள் நடந்தது. மழைக்கால கூட்டத்  தொடரை ஒப்பிடுகையில், இந்த கூட்டத் தொடர்  ஆக்கப்பூர்வமாக இருந்தது. கடந்த  கூட்டத் தொடரில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர்  வசுந்துரா ராஜே, மத்தியப் பிரதேச  முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர்  ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். […]

tomscratch20042007 23/12/2015

எம்.பி.,க்களுக்கு, நாட்டு நலனில் அக்கறை இல்லை; சொந்த நலனில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர்’ என, நேற்று முன்தினம் தெரிவித்த கருத்துக்காக, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று வருத்தம் தெரிவித்தார். டில்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நேற்று முன்தினம், லோக்சபாவில், காங்., – எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்; சபாநாயகர் மேடையருகே சென்று கூச்சலிட்டனர். இதனால், எரிச்சல் அடைந்த சபாநாயகர் சுமித்ரா […]

samaraiqi4273 23/12/2015

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களின் நகர பகுதியில் குறிபிட்ட உயரத்தை விட அதிகமான உயரங்களில் கட்டிடங்கள் கட்ட கூடாது என்று என்பதை மாநகராட்சி நிர்வாகத்தினர் வரையரை செய்து வைத்துள்ளனர். இந்த சட்டத்தை மீறி கட்டுவதும் பல தொழிலதிபர்களின் வழக்கமாக தான் உள்ளது. இதற்க்கு மாநகராட்சி அதிகாரிகள் கணிசமான தொகையை பெற்று கொண்டு காட்டு இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுவிடுவார்கள். இது ஒருபுறம் இருக்க திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கடந்த 2009 ஆம் ஆண்டு கட்ட […]

tomscratch20042007 22/12/2015

காங்கிரஸ் எம்பிகளுக்கு தேச நலனில் அக்கறையில்லை என்று பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று காலை பாராளுமன்றம் கூடிய போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீது டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும், இதற்காக கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என எம்.பிகள் 10 உறுப்பினர்கள் சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டது. ஆனால் இதனை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்துவிட்டார். […]

tomscratch20042007 22/12/2015

சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை மையப்படுத்தியே இந்தியாவில் விலை நிர்ணயம் செய்யும் வழக்கம் உள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன் இவற்றின் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களே மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி  வழங்கியுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை முன்வைத்து, விலை ஏற்ற இறக்கம் செய்யப்படுகிறது. தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் […]

angusam 22/12/2015

அவர்  பெயருக்கு தான் என்.சி.சி. ஆசிரியர் ஆனால் அவர் பணிபுரிந்த காலத்தில் மாணவர்களுக்கு எந்த பயிற்சியும் அளிக்கவில்லை.  என்பது தான் அப்பட்டமான உண்மை! தமிழகத்தில் இப்படி ஒரு ஆசிரியரை யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டீர்கள் அப்படி ஒரு வாத்தியார் திருச்சி ஈ.ஆர். பள்ளியில் இருக்கிறார். அவர் பெயர்  கே.ஆர்.சிவசுப்ரமணியன் என்ற அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அவர் பள்ளியின் என்.சி.சி. பயிற்றுனராக வேலை பார்க்கிறார். மாணவர்களுக்கு தரவேண்டிய சான்றிதழ்களையும் அளிக்கவில்லை. அவர் மாணவர்களுக்கு பயிற்சியின் போது காலையில் […]

tomscratch20042007 22/12/2015

இளம் குற்றவாளிகளின் வயது வரம்பில் மாற்றம் செய்ய வகை செய்யும் சிறார் நீதிச் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளியின் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறார் நீதிச் சட்டத்திருத்த (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து அவசரமாக சிறார் நீதிச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய […]

tomscratch20042007 22/12/2015

திருச்சி முள்ளிகரும்பூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 70). இவரது பேரன் மகேஸ்வரன் (22). நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். உய்யக்கொண்டான் திருமலை சோதனை சாவடி அருகே செல்லும் போது, அந்த வழியாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். மகேஸ்வரன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருச்சி […]

tomscratch20042007 22/12/2015

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் செய்தது போல் தேசிய கீதத்தில் மாற்றம் செய்யவேண்டும் என மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார். கடந்த மாதம் சுப்பிரமணிய சுவாமி மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் “இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மன இருக்க வேண்டுமா அல்லது வந்தே மாதரம் இருக்கவேண்டுமா என்பது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து அரசியல் நிர்ணய சபை தலைவரான ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, […]

tomscratch20042007 22/12/2015

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பல்விந்தர் சிங் என்ற பப்லூ. இவர் பெங்களூருவில் உள்ள மின்னணு உபகரணங்கள் தயாரிக்க கூடிய தொழிற்சாலையில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் தோல்வி அடைந்தால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அதிகாலையில் அவர் தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பப்லூ திடீரென அருகில் இருந்த வாளை எடுத்து இருவரையும் […]

angusam 22/12/2015

ரேப் என்று கத்தினால் கூட போலீஸ் அமைதியாகிவிடும் ஆனால் பீப் என்று சொன்னாலே அரஸ்ட் வாரண்ட் வீடு  தேடி வரும். அந்த அளவுக்கு நீதிமன்றமே கைது செய்ய தடையில்லை என்று பிறப்பித்த உத்தரவு நடிகர்களை அலர வைத்துயிருக்கிறது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் ரேஷன் கடையில் நிற்பதுபோல   தமிழகம் முழுவதும் வரிசையில் நின்று வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சிம்பு மீது. இன்னொரு பக்கம் கண்ணீரால் உங்க கால்களை கழுவுகிறேன் என்று […]