Year: 2016

angusam 28/12/2016

உலக வில்வித்தை போட்டியில் திருச்சி இளங்கோ. திருச்சி மாவட்டம் சோழிங்கநல்லூரில் வசிக்கும் நாகராஜன்-அனுராதா ஆகியோரின் மகன் இளங்கோ, திருச்சி ஜோசப் மற்றும் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளிகளில் படித்தார். அப்போது அவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமானது. இப்போது  திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி பயின்றுவரும் இவர், சிறுவயதில் இருந்தே, துப்பாக்கி சுடுதல் மீது ஆர்வம் உண்டானது. அது இப்போது வில்வித்தை போட்டியில் பரிசுகளை வெல்ல உதவுகிறது. இளங்கோ இதுகுறித்து , இதுவரை வில்வித்தைப் போட்டியில் […]

angusam 28/12/2016

இந்தியாவிற்கே வழிகாட்டும் மணப்பாறை மாணவர்கள்   இந்தியாவின் மிகமுக்கியமான சவாலாக “பொது சுகாதாரம்” உள்ளது  என்றார் மகாத்மா காந்தி. இன்றுவரை பெரும்பாலான மக்களுக்கு இன்னும் கழிப்பறை வசதி போய் சேரவில்லை என்பதே  எதார்த்தம்.  இன்னமும் சுமார் 638 மில்லியன் மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்கிறது புள்ளிவிபரங்கள். ஒவ்வொரு நாளும் இந்தியா முழுவதும் வயிற்றுப் போக்கினால் ஆயிரம் குழந்தைகளுக்கு மேல்  இறப்பதாக அதிர்ச்சி தருகிறது இன்னொரு புள்ளிவிபரம். இந்நிலையில் மணப்பாறை பள்ளி மாணவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் […]

angusam 27/12/2016

நீட் தோ்வை எதிர்கொள்ள மாணவா்களே தயாரா ? நீட் மருத்துவ நுழைவு தோ்வு, மாணவர்களுக்கு அவசியம் என்பதைவிட தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பல மாநிலங்கள் எதிர்த்தும்கூட.உச்சநீதிமன்றம் நீட் மருத்துவ நுழைவு தோ்வு நடத்தவும், அதன் அடிப்படையிலேயே மருத்துவ மாணவா் சோ்க்கை இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இப்போது இந்த தோ்வை தமிழிலும் எழுதலாம் என  அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதிலும் மொத்தம் 53ஆயிரம் டாக்டர் சீட்டுகளில் பாதிக்குமேல் தனியார் வசமே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா […]

angusam 27/12/2016

நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேர மருத்துவமனையாக மாற்றியமைக்க வேண்டி பொது மக்கள் கோரிக்கை திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பா்மாகாலனி, பக்தவத்சலம் நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அருகே உள்ள நவல்பட்டு, புதுத்தெரு, சோழமாதேவி, சோழமாநகர், போலீஸ்காலனி, அண்ணாநகர், சமத்துவபுரம், காமதேனு நகா், சிலோன்காலனி, பாரதியார் நகா், காவேரி நகா், கும்பக்குடி, அயன்புதூர், வேலாயுதங்குடி, சூரியூா், காந்தலூர், செட்டிப்பட்டி, இலந்தைபட்டி, பழங்கணான்குடி, பூலாங்குடி, பாரத்நகர் உள்ளிட்ட 30 […]

angusam 27/12/2016

உலக போட்டியில் பங்கேற்க தடை போடும் வறுமை – மனம் இருந்தால் மார்க்கம் உண்டு இந்த சமூகத்தில் பல லட்சங்களை கொட்டி விளம்பரம் தேடும் விளையாட்டு போட்டிகளுக்கும், பல கோடிகளை கொட்டி பணம் சம்பாதிக்கும் பணக்கார விளையாட்டுகளுக்கும் மட்டுமே ஸ்பான்சர் பண்ணுவதற்கு விளம்பர நிறுவனங்கள் முன் வருகிறார்கள். ஆனால் தமிழகத்திற்க்கு சொந்தமான பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்த்தை ஊக்குவிக்க யாரும் இல்லை என்பதை பதிவு செய்யவே இந்த பதிவு. திருச்சி சட்ட கல்லூரியில் 3 ஆண்டு […]

angusam 23/12/2016

இந்தவார நம்ம திருச்சி இதழில்… தொடர் திருட்டை அம்பலப்படுத்திய நம்ம திருச்சி  இதழ்,  திருச்சி போலீஸாருக்கு ராயல் சல்யூட்.. இந்தியாவிற்கே வழிகாட்டிய மணப்பாறை மாணவர்கள் உலக வில்வித்தைப்போட்டியில் திருச்சி மாணவர் நிமிடத்திற்கு 93முறை சாதிக்கும் மாணவர் எங்கவூரைப்போல வருமா திருச்சி திருவெறும்பூர் ஊராட்சி குறித்த  சிறப்புக்கட்டுரை ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அக்கறைகாட்டுமா அரசு குடும்ப விழாவாக நடந்த வழங்கறிஞர் சங்க விழா நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களே தயாரா.. நமக்குள்ளே ஏராளமான கதை இருக்கு.. பெரியார் கைத்தடிக்கு […]

angusam 16/12/2016

திருச்சி கிரிக்கெட்டின் தந்தை திருச்சியின் அடையாளம் (5) 1933-ம் ஆண்டு காந்தியடிகள் திருச்சிக்கு  வருகை புரிந்தார்.  அவருக்கு திருச்சி நகர்மன்றத்தின் சார்பாக வரவேற்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட நகர்மன்றம் காந்திக்கு வரவேற்பு கொடுப்பதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. அந்த எதிர்ப்பையெல்லாம் முறியடித்து  காந்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல், அப்போது, திருச்சி நகரம் முழுக்க, தண்ணீர் பஞ்சம் இருந்தது, குடிதண்ணீருக்கே மக்கள் சிரமப்பட்டார்கள். மக்களின் நலனிற்காக  சொந்தப்பணம்  ரூபாய். 40 ஆயிரத்தை செலவிட்டு காவேரியில் ஆறுகிணறுகளை வெட்டிய  […]

angusam 10/12/2016

சசிகலாவுக்கு எதிர்ப்பு, சமரசம் செய்ய திட்டமிடும் மன்னார்குடி,போர்க்கொடி தூக்கியவர்களுக்கு துணை பொதுச்செயலர் பதவி செங்கோட்டையனை மீண்டும் மந்திரி சபையில் சேர்க்க திட்டம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை பிடிப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன், ஜெய லலிதாவின் தோழி சசிகலா, சமரசம் செய் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தனக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய வர்களுக்கு, கட்சியில் புதிதாக துணைச் செயலர் பதவியை உருவாக்கி வழங்கவும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டை யனுக்கு மந்திரி சபையில் இடம் தரவும் […]

angusam 08/12/2016

​ கணவரை சிறையில் தள்ளியதற்காக ஜெ.வை பழிவாங்கி விட்டார் சசிகலா.. சசிகலா புஷ்பா பரபர குற்றச்சாட்டு ஜெயலலிதாவின் உடல் பக்கத்தில் நின்று கொண்டு ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாதவர் சசிகலா என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கூறியுள்ளார். 2011ஆம் ஆண்டு சதி செய்த துரோகிகள் என சசிகலா நடராஜன் கும்பலை பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். 2011ம் ஆண்டு கணவர், அண்ணனை சிறையில் தள்ளியதற்கு ஜெயலலிதாவை பழிவாங்கிவிட்டார் சசிகலா என்றும் சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார். […]

angusam 06/12/2016

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து தனி ஹெிகாப்டரில் மோடி புறப்பட்ட மோடி, அடையாறு கடற்படை தளத்தில் வந்து இறங்கியதும் ராஜாஜி அரங்கிற்கு வந்து அங்கு வைக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு வெள்ளை மலர்கள் கொண்ட மலர் வளையம் வைத்து தொட்டு கும்பிட்டு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. அருகில் நின்றிருந்த சசிகலா, இளவரசியைத் தேடி போன மோடி ஆறுதல் வார்த்தைகள் பேசினார். சசிகலாவின் தலையை […]

angusam 05/12/2016

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்கள் தலைவி பூரண நலத்துடன் மீண்டு வந்து, இரட்டை விரல் உயர்த்தி, கைகளை ஆட்டிப் புன்னகையுடன் தரிசனம் தருவார் என்ற நம்பிக்கையுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை, பரிதவிப்போடும் பதற்றத்தோடும் மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்தார்கள். நோயுடன் போராடுவது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஓர் அத்தியாயம். ஆனால், கலைத்துறையில் மட்டுமின்றி அரசியல் அரங்கிலும் வெற்றிகரமான ஒரு தலைவியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஜெயலலிதா அனுதினம் எதிர்கொண்ட போராட்டங்கள்… அதைக் […]

angusam 05/12/2016

​ 5ம் தேதி இரவு 11.30க்கு முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ! தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு உடல்நல கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பல சிகிச்சைகளுக்கு பின் குணமாகி வந்தவருக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது பல மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு குணமாவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் […]

angusam 05/12/2016

முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு ‘எக்மோ’ கருவியோடு, உயிர் காக்கும் கருவிகள் கொண்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் குழு நிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பு மீண்டும் அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது.

angusam 05/12/2016

கைவிரித்த காவிரி….  தொடரும் பலிகள் திருச்சி மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக கடந்த செப்டம்பர் 20ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை கடைமடைப் பகுதிகளுக்கு போதிய  தண்ணீர் போய் சேரவில்லை. அடுத்து வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என காத்திருந்த விவசாயிகள் நெல் நாத்து விட்டனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பு வீணாக போனது. வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப்போக, விதைநெல்கள், கருக துவங்கியது. இதையெல்லாம் பார்த்த விவசாயிகள், மனஉளைச்சலில்  விபரீத முடிவுகளை எடுத்துள்ளனர். திருச்சி அடுத்த தாயனூர் […]