உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு குறித்து திருச்சியில் மாரத்தான் போட்டி

JAP10119திருச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பு அலுவலகத்தில் காவேரி மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், இந்திய தொழில் கூட்டமைப்பு திருச்சி மண்டல தலைவர் சம்பத் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

காவேரி மருத்துவமனை, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.), யங் இந்தியன் ஆகிய அமைப்பு சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாரத்தான் போட்டி திருச்சியில் வருகிற செப்டம்பர் மாதம்  25-ம் தேதி காலை நடைபெற உள்ளது. போட்டி கோர்ட்டு அருகே தொடங்கி அண்ணா விளையாட்டரங்கத்தில் முடிவடைகிறது. 21 கிலோ மீட்டர் தூரம், 10 கிலோ மீட்டர் தூரம், 5 கிலோ மீட்டர் தூரம் என 3 பிரிவுகளில் போட்டி நடைபெறும். 3 பிரிவு போட்டிகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசு தொகை பிரித்து வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் திருச்சி கண்டோன்மெண்ட் காவேரி மருத்துவமனையிலும், மாரத்தான் போட்டிக்கான பிரத்யேக இணையதளத்திலும் பதிவு செய்யலாம். பதிவு கட்டணம் தனித்தனியாக உண்டு.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து போட்டிக்கான பதாகை, இணையதள முகவரி தொடங்கி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம், முன்னாள் தலைவர்கள் முரளி, கிருஷ்ணகுமார், துணை தலைவர் அன்பரசு, யங் இந்தியன் திருச்சி கிளை தலைவர் பிரதீவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *