johnhatton61986 25/06/2016

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்455272-321677-jailகுடி, வேம்பங்குடி ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளைகளில் ரூ.1.52 கோடி மோசடியில் ஈடுபட்டதாக  மணமேல்குடி வங்கியின் கிளை மேலாளரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி, கீரமங்கலம் அருகே வேம்பங்குடி உள்ள இந்தியன் வங்கியின் கிளைகளில் நடத்தப்பட்ட தணிக்கையின் போது கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 15.12.2015 ஆம் ஆண்டு வரையில் சுமார் ரூ.1.52 கோடிக்கு மோசடி நடந்தது தெரிய வந்தது.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கவரிங் நகைகளை வைத்து நகைக்கடன் வழங்கியதன் மூலமாகவும், போலியான வாடிக்கையாளர்களுக்கு குறுகிய கால கடன் வழங்கியது போன்ற வழிகளில் வங்கி ஊழியர்களே மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து வங்கியின் திருச்சி மண்டல மேலாளர்  ஆர். செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். அதில், மணமேல்குடி வங்கி கிளை மேலாளர்  டி. சோலைசாமி(55) இன்று கைது செய்தனர்.  மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ள வேம்பங்குடி வங்கி கிளை மேலாளர்  சண்முகவேல், துணை மேலாளர் திபோஜித் ராயசவுத்ரி ஆகியோரைத் தேடி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதாகக் கூறி வங்கி அலுவலர்களே ரூ.1.52 கோடியை மோசடி செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*