johnhatton61986 25/06/2016

photo-cmsMSID16967634
புதுக்கோட்டையில் மிளகாய் பொடி தூவியதுடன், மயக்க மருந்து தெளித்து பெண்ணிடம் 20 பவுன் நகையை இன்று பறித்து சென்ற மர்ம நபர்கள் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை ஜானகி நகர் பகுதியில் தொழிலதிபர் ரவி அவரது மனைவி மாலதி (40)யுடன்  வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவில் ரவி, அவரது மனைவி மாலதி ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 3 மணியளவில்  வீட்டில் கதவு தட்டப்பட்டதையடுத்து மாலதி எழுந்து சென்று கதவை திறந்தார். அப்போது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் 3 பேர் மாலதியின் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு மயக்க மருந்து தெளித்துவிட்டு, அவர் அணிந்திருந்த 2 தங்க சங்கலி உள்பட 20 பவுன் தங்க நகைகளை பறித்துச்சென்றனர். இந்தச்சப்தம் கேட்டு வாசலுக்கு வந்த அவரது கணவர் ரவியைத்தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ரவி சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மாலதியிடம் மிளகாய் பொடி தூவியும், மயக்க மருந்து தெளித்தும் 20 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் 3 பேரையும்  தீவிரமாகத் தேடி வருகின்றனர். புதுக்கோட்டையில் அதிகாலையில் வீட்டின் கதவைத் தட்டி எழுப்பி பெண்ணிடம் மிளகாய் பொடி தூவியும், மயக்க மருந்து தெளித்தும்  நகை திருடிச்சென்ற சம்பவம் நகர மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*