tomscratch20042007 30/06/2016

சிவகாசி அருகே உள்ள ஊரம்பட்டியை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி விஜயா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ் கொலை செய்யப்பட்டார்.

poison copyஇதையடுத்து ராஜின் தாய் சீதாலட்சுமியுடன், விஜயா வசித்து வந்தார். அடிக்கடி 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்றும் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட ஆத்திர மடைந்த சீதாலட்சுமி அரிவாளால் விஜயாவை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் அவர் காயங்களுடன் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் விஜயாவை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்நிலையில் மருமகளை வெட்டிய சீதாலட்சுமி வாழ்க்கையில் வெறுப்படைந்து வி‌ஷம் குடித்து சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*