காரில் வந்தபோது விபத்தில் தந்தை பலி அவரது விருப்பத்தை நிறைவேற்றிய மகன்!

                                        அண்ணா பல்கலைக்கழகத்தில் உருக்கமான சம்பவம்

பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னைக்கு வரும் வழியில் விபத்தில் தந்தையை பறிகொ டுத்த புதுக்கோட்டை மாணவர் தாயின் அறிவுரையின்படி கலந் தாய்வில் கலந்துகொண்டார். இந்த உருக்கமான சம்பவம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நிகழ்ந்தது.prathi

புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்குறிச்சி என்ற ஊரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். சிவகங் கையில் சிவில் சப்ளை சிஐடி பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி ரேணுகாதேவி. இவர் களின் மகன் பிரதியுனன், பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தார். நேற்று மதியம் 2 மணிக்கு அவருக்கு கலந்தாய்வுக்கான நேரம் ஒதுக் கப்பட்டிருந்தது.

கலந்தாய்வில் கலந்துகொள் வதற்காக புதன்கிழமை இரவு தனது தந்தை ரவீந்திரனுடன் பிரதி யுனன் காரில் வந்துகொண் டிருந்தார். அவர்களின் கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்துகொண்டிருந்தபோது அதன் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிரதியுனனுக்கு லேசாக அடிபட்டது. விபத்தில் தந்தை இறந்ததைப் பார்த்து நிலைகுலைந்துபோன பிரதியுனன் உடனடியாக தாய் ரேணுகாதேவிக்கு போன்செய்து விபத்து பற்றி கூறினார். இதைக் கேட்ட ரேணுகாதேவி, காரில் உளூந்தூர்பேட்டை வந்தடைந் தார். தந்தையின் உடலை தான் பார்த்துகொள்வதாகவும் கலந் தாய்வில் கலந்துகொள்வதற் காக சென்னைக்கு செல்லுமாறும் மகனுக்கு கண்ணீர் மல்க அறிவுரை கூறினார்.

விபத்தில் தந்தையை பறி கொடுத்த சோகத்துடன் அரசுப் பேருந்தில் சென்னைக்குப் புறப்பட்ட பிரதியுனன், நேற்று மதியம் அண்ணா பல்கலைக் கழகத்தை வந்தடைந்தார். ஈடுசெய்ய முடியாத இழப் பையும் தாங்கிக்கொண்டு மனஉறுதியுடன் கலந்தாய்வில் கலந்துகொண்டார். காஞ்சிபுரம் அருகேயுள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் பிஇ. சிவில் பாடப்பிரிவை தேர்வுசெய்தார். கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுக்கொண்டதும் உடன டியாக ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

“எனது தந்தை என்னை ஒரு பொறியாளராக பார்க்க ஆசைப் பட்டார். அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக துய ரமான சூழலிலும் கலந்தாய் வில் கலந்துகொண்டேன்” என்று மாணவர் பிரதியுனன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *