புதுக்கோட்டையில், வீட்டில் தீ விபத்து

புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள சாந்தநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே மெய்யம்மை என்பவர் தனது தம்பி மற்றும் மகனுடன் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு மெய்யம்மை வீட்டில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு விட்டு, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இந்த நிலையில் மெய்யம்மையின் வீட்டில் இருந்து புகை வெளியேறுவதை கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக இது குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகியது. வீட்டில் ஏற்றப்பட்டு இருந்த விளக்கில் இருந்த தீ வீட்டில் இருந்த பொருட்களில் பரவியதால் தீ விபத்து ஏற்பட்டது தீயணைப்பு வீரர்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *