முதல் திருமணத்தை மறைத்து 2–வது திருமணம் செய்த வாலிபர் கைது

ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). இவருக்கு திருமணமாகி சாந்தகுமாரி (33) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவியிடம், நான் தனியாக தொழில் தொடங்க உங்கள் வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் வாங்கி கொண்டு என்னிடம் தரவேண்டும் என துன்புறுத்தி உள்ளார். இதனால் அவர் பல்வேறு இடங்களில் அழைந்து பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. இதனால் சாந்தகுமாரி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில், சாந்தகுமாரியை திருமணம் செய்ததை மறைத்து, செந்தில்குமார் ஆலங்குடி அருகே உள்ள கும்மங்குளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சாந்தகுமாரி ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை நேற்று கைது செய்தார். பின்னர் அவர் ஆலங்குடி நீதிமன்ற நீதிபதி கலைநிலா முன்பு ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *