johnhatton61986 08/08/2016

அறந்தாங்கியில் இருந்து ஒரு டவுன்பஸ் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூருக்கு சென்றுவிட்டு அறந்தாங்கிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை குளமங்கலத்தை சேர்ந்த செல்வம் (வயது38). என்பவர் ஓட்டியுள்ளார். பஸ் ஆளப்பிறந்தான் அருகே வந்தபோது, பஸ் டிவைரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருக்கும் புளியமரத்தில் மோதியது.

 இதில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பூக்கொல்லையை சேர்ந்த பாண்டியம்மாள்(49), பேராவூரணியை சேர்ந்த உலகம்மாள்(50), புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தை சேர்ந்த கலைச்செல்வி(28), ஆளப்பிறந்தானை சேர்ந்த ராக்கம்மாள் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் பாண்டியம்மாள் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*