johnhatton61986 16/08/2016

புதுக்கோட்டையை சேர்ந்தவர் தவமணி. இவர் அப்பகுதியில் ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ஒட்டலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் தவமணியின் ஒட்டல் தீ பிடித்து எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் ஒட்டலில் இருந்த பொருட்கள் மற்றும் மேற்கூறை முற்றிலும் சேதமடைந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கலாம் என கூறபப்டுகிறது. இந்த தீ விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*