ஓவியங்களால் மிளிரும் திருச்சி மத்திய பேருந்து நிலையம்

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள், இயற்கை காட்சிகள் கொண்ட ஒவியங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் திருச்சியை சேர்ந்த ஷைன் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.trichy paint

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் புறநகர் பேருந்துகள் நிற்கும் பகுதிகளில் உள்ள சுவர்களில் சிறுநீர் கழிப்பது, குப்பைகளை வீசி செல்வது, சுவரொட்டிகளை ஒட்டுவது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மத்திய பேருந்து நிலைய சுவர்களை அழகுபடுத்தும் பணியில் திருச்சி ஷைன் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதில் 100 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட ஒவியங்களை வரைந்தனர்.trichy color 1

இதில், சுகாதர முக்கியத்துவம், பொதுமக்களின் கடமை, இயற்கை வளங்கள் பாதுகாப்பு, மரங்கள் வளர்பதால் ஏற்படும் நன்மைகள், புகை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள், மதுவினால் ஏற்படும் கேடு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஒவியங்கள் வரையப்பட்டன.

இது குறித்து ஷைன் அமைப்பினர் தெரிவிக்கையில்: நம் நகரத்தை நாம் தான் சுத்தப்படுத்த வேண்டும். பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் இனி இந்த சுவரை அசுத்தபடுத்த மாட்டார்கள் என நினைக்கிறோம் என தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *