திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஆக. 21-ம் தேதி தூயவளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம், ஈக்விடாஸ் நுண்கடன் நிறுவனம்,விஷன் இந்தியா, வேலி மென்பொருள் ஆகிய நிறுவனங்கள் இந்த முகாமை நடத்துகின்றன. முகாமில் 1500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.இளநிலை,முதுநிலையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், கடந்த சில ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.பங்கேற்க விரும்புவோர் முகாம் நடைபெறும் நாளன்று தங்களது தன்விவரக் குறிப்பு  கொண்டு வர வேண்டும்.   மேலும் விவரங்களுக்கு 80980- 02828.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *