johnhatton61986 27/08/2016

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயவரதன் (வயது 22), இவர் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே வரும் போது பின்னால் வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விஜயவரதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயவரதன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*