angusam 29/09/2016

சிநேக பாலா எழுதுவும் ஆயிரம் கனவுகள் தொடர் நாவல் தொடர் -2

அகிலா மற்றும் அருணின் சந்திப்பு…

அன்று ஞாயிற்றுகிழமை, சூரியன் எழும்முன்பே அருண் எழுந்திருந்தான். எழுந்த உடன் ரகு மற்றும் விமலுக்கு போனில் அழைத்தான். இருவரும் “எழுந்துட்டோம் டா” என்றனர். அருண் குளித்தான். மாடியில் இருந்து இறங்கி கீழே சென்றான். அவன் அப்பா ரவி காபியோடு தயாராக இருந்தார்.”காலை வணக்கம் அப்பா” என்றான் அருண் காப்பியை வாங்கியபடி.”காலை வணக்கம் என்றார் அவர்.” அப்பா நீங்க போடற  காப்பிய அடிச்சுக்க ஆலே  இல்லப்பா” என்றான் அருண்.” போதும் அருண் உன் பாராட்டு. பணம் ஏதும் கூடுதலாக வேணுமா” என்றார் புண்முறுவலோடு.”அப்பா” என்று அவனும் சினுங்கினான் பொய் கோபத்தோடு.”சரி சரி விளையாட்டெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு பத்திரமா போய்ட்டுவா.கார்ல ரொம்ப வேகமா  போகாத  “என்றார் ரவி. சரிப்பா நீங்க என்ன சொன்னாலும் செய்ரேன் “என்றான் அருண். அப்பா நா கிளம்பரேன் என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறினான் அருண்.அடுத்த நிமிடம் கார் மின்னல் வேகத்தில் பரந்தது.

அகிலா,தேவி மற்ற எல்லா மாணவர்களும் பஸ்ஸில் ஏற தயாராகிக் கொண்டிருந்தனர்.அகிலா அந்த கனவிற்கு பிறகு யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. தேவியிடம் கூட அவள் கேட்டதற்கு மட்டுமே பதில் கூறுவாள். அன்று தான் அகிலா கொஞ்சம் சிரித்தாள். அந்த கனவிற்கும் தனக்கும் எந்த சமந்தமும் இல்லை என்று உள்ளம் நினைத்தாலும் ஏனோ அவளால் ஏற்க முடியவில்லை.
ஆனால் அன்று சற்று நிம்மதியுடன் இருந்தாள். முகத்தில் இருந்த கவலை ரேகைகள் மறைந்திருந்தன.ஊதா கலர் சுடிதாரில் தேவதையாக தெரிந்தாள் அகிலா. எல்லோரும் பேருந்தி்ல் ஏறினர்.

அகிலா ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தாள். தேவி அவள் அருகில் அமர்ந்தாள். இருவரும் இயற்கையை ரசித்து கொண்டே கலகல என்று பேசிக்கொண்டே வந்தனர்.

ஆயிரம் கனவுகள் - 1
ஆயிரம் கனவுகள் – 1

அருணின் கார் மின்னல் வேகத்தில் பறந்துக்கொண்டு இருந்தது. எட்டு மணிக்கெல்லாம் கொல்லிமலைக்கு வந்துவிட்டனர். மலையின் அழகை அங்குலங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தான் ரகு. விமலும் அருணும் பேசிக்கொண்டே இருந்தனர். கொல்லி மலையை அவர்கள் அடைந்தனர். நேராக அருவிக்குச் சென்றனர். மூன்று பேரும் சென்று ஆட்டம் போட்டனர். அருண் சிறிது நேரம் குளித்துவிட்டு வந்துவிட்டான். விமலும் ரகுவுக்கு வர மனமே இல்லை. “அருண் நீ போ நாங்க ஒரு அஞ்சு நிமிசத்துல வந்தரோம்” என்றனர். அருண் சென்று உடை மாற்றிக்கொண்டு வந்தான். செல்லை எடுத்து தன்னை ஒரு படம் எடுக்க நினைத்தான். சற்று தூரத்தில் மரம் செடியோடு அழகாக  இருந்தது. அங்கு சென்று எடுக்கலாம் என்று எண்ணினான். அந்த இடத்தை நோக்கி நடந்தான்.

அந்த நேரம் “காப்பாற்றுங்கள்” என்று ஏதோ சத்தம் கேட்க பின்னால் திரும்பி பார்த்தான் அருண். ஒரு பெண் ஓடி வந்தாள். இவன் ஓடி சென்று அவளை பிடித்தான். அவள் அவன் கையை இறுக்கமாக பிடித்தாள். அவன் நிலமையை உணரும் முன் அவள் மயங்கினாள். அருண் அவள் கண்ணத்தை தட்டினான். என்ன செய்தும் அவள் எழவில்லை. தண்ணி எடுத்து வரலாம் என்றாலும் தனியே அவளை விட்டு விட்டு எப்படி செல்வது. அப்போது “அகிலா அகிலா ” என்று கூவிக்கொண்டே தேவி வந்தாள். அங்கு அருணை பார்த்தாள் . அவன் மடியில் அகிலா . திடுக்கிட்டாள் தேவி. ஓடி சென்றாள் அருணை நோக்கி.” அகிலா அகிலா” என்று அவளை உலுக்கிணாள். அருணை சற்று வினோதமாக தான் பார்த்தாள். அவள் வந்த உடன் அவன் அவளை விட்டுவிட்டு தண்ணி எடுக்க சென்றான்.அவன் திரும்பி வரும்வரை தேவி பதட்டத்துடன் இருந்தாள். அருண்  தண்ணீரை வேகமாக தெளித்தான். அவள் கண் விழித்தாள்.”அகிலா”என்று அவளை  கட்டி அனைத்தாள் தேவி . அகிலா பதறி  எழுந்தாள். தேவியை இழுத்துக் கொண்டு விரைந்து நடந்தாள். அவர்கள் செல்லும் வழியை அருண் பார்த்துக்கொண்டு இருந்தான். அதற்குள் ரகுவும் விமலும் அருணை தேடி வந்தனர் .”அருண் அருண் “என்று கூப்பிட்டான் ரகு. அருண் அவனை திரும்பி பார்த்தான். “டேய் அருண் என்னடா ஆச்சு”என்றான் விமல்.அருண் நடந்ததை கூறினான்.”ஏன்டா அந்த பொண்ணு பயந்து ஒடி வந்துச்சு,ஒன்னும்  புரியலயே ” என்றான் ரகு.”எனக்கு ஒரு நன்றி கூட சொல்லல டா “என்றான் அருண் ஏமாற்றத்தோடு.”சரி வாங்க டா போலாம் பசிக்குது ” என்றான் விமல் நிலமையை மாற்ற. மூவரும் சென்றனர்.

“ஏய் அகிலா என்னடி ஆச்சு உனக்கு” என்றாள் தேவி.அவள் தேவியின் கையை இருக  பற்றினாள்.”அது..அது…நீங்க அங்க உக்காந்து பேசிக் கொண்டு இருந்தீங்கள அப்ப நா சும்மா அப்படியே நடந்து வந்தேன் .அங்கு ஒரு மரத்தில் அகிலா , ராஜ் என்று பெயர் இருந்தது. அதை நான் தொட்ட உடன் ஏதோ ஒரு கை என் கை அழுத்தியது. நான் கஷ்டப்பட்டு இதில் இருந்து எடுத்து விட்டு ஓடி வந்தேன்.அகிலா அகிலா என்று யாரோ என்னை கூப்பிடும் சத்தம் கேட்டது.நான் ஓடினேன்.”என்றாள் அகிலா.”என்னடி ஏதோ ஹாலிவுட் கத சொல்ரியா”என்றாள் தேவி.”ஏய் இதெல்லாம் நா ஏற்கனவே என் கனவில் வந்துச்சுடி.ரொம்ப பயமா இருக்கு”என்றாள் அகிலா. “பயப்படாத ஒன்னும்மில்ல “என்று அவளை தேற்றினாள் தேவி.”ஆமா  நீ மயங்கிய போது உன்னை காப்பாற்றியவர்க்கு ஒரு நன்றி கூட சொல்லாம  வந்துட்டியே”என்றாள் தேவி.”ஆமா  எனக்கும் உறுத்தலா தான் இருக்கு.என்ன செய்ய” என்றாள் அகிலா.”விதிபடி நீங்க மறுபடியும் சந்திச்சா சொல்லிக்கலாம்.நீ ஏதும் குளப்பிக்காத”என்றாள் தேவி.

அந்த விதி வலியது. காரணம் இல்லாமல் யாரையும் சந்திக்கவிடாது.

ஒரு வாரம் ஆகியிருந்தது அந்த சம்பவம் நடந்து. அன்று அகிலாவிர்க்கு புது நம்பரில் இருந்து போன் வர தயக்கத்துடன் எடுத்தாள். மறுமுனையில் ஆண் குரல். “ஹலோ அகிலாவா”.”ஆம். நீங்கள்….” என்று  இழுத்தால் அகிலா.”நான் உங்களை அன்று காப்பாற்றினேனே”என்றான் அருண் .”ஓ….. நீங்களா . அன்று நான் ஒரு நன்றி கூட சொல்லல. மனிச்சிருங்க” என்றாள் அகிலா.”அதெல்லாம் ஒன்னும்மில்லைங்க. ஒங்க ஐடி கார்டு அன்னைக்கு விழுந்துருச்சு . என்ட்ட தான் இருக்கு நாளைக்கு பஸ்டாண்ட் பக்கத்துல இருக்குற காப்பி ஷாப்பல மீட் பண்ணலாமா”என்றான் அருண் தயக்கத்துடன். “வரேன். நாளை பாக்கலாம். பை…”என்று போனை வைத்தாள் அகிலா.

கனவுகள் தொடரும்………

வரும் வாரம்: அகிலா ராஜை தேடி செல்லுதல்……

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*