samaraiqi4273 07/10/2016

uvs151120-001இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சராசரி விகிதாசாரத்தில் திருநங்கைகள் என்ற மூன்றாம் பாலினம் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியே வர தயங்கி முடங்கி கிடந்த காலம் கடந்து தற்போது அனைத்து துறைகளிலும் தங்களின் திறமைகளை திருநங்கைகள் நிரூபித்து வருகின்றனர். இந்த வளர்ச்சி தான் புதிய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாதவர்கள் தற்போது பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாகும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இதுவே சமுதாயம் மாறி வருவதற்கான ஒரு எடுத்துகாட்டு தான், இருப்பினும் மற்ற மாநிலங்களில் சிவனாக வழிபடும் இவர்களை தமிழகத்தில் இன்னும் தீண்டதகாதவர்கள் என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

uvs151120-006இப்படிபட்ட சமுதாயத்தில் தன்னையும், தன்னை சார்;ந்த திருநங்கைகள் சமுதாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்துவரும் திருநங்கையான கஜோல் பேசுகையில்…
சிறுவயதில் நான் திருநங்கை என்று உணர்ந்த பின்பு வீட்டை விட்டு வெளியேறி என்னை போன்று உள்ள திருநங்கைகள் சமுதாயத்தில் சேர்ந்து வாழ துவங்கினேன். பின்னர் அவர்களின் உதவியோடு வணிகவியல் இளங்கலை படித்து பட்டம் பெற்றேன். தொடர்ந்து கணிணி தொடர்பான சில அடிப்படை படிப்புகளை படித்து முடித்தேன். ஆனால் என்ன வேலை செய்வது என்பது மிகப்பெரிய கேள்வி குறியானது?. நான் எங்கு சென்று கேட்டாலும் என்னை போன்ற திருநங்கைக்கு வேலை கொடுக்க யோசித்தார்கள்.

uvs151120-004 அதனால் திருச்சியில் உள்ள கடைவீதிகளுக்கு சென்று அவர்களிடம் காசு கேட்டு செல்லும் தொழிலுக்கு வழுகட்டாயமாக தள்ளப்பட்டேன். இந்த தொழிலில் எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் வயிற்றை நிரப்ப வேண்டும் என்பதற்காக இந்த தொழிலை செய்து வந்தேன். அந்த சமயத்தில் தான் தமிழக அரசு திருநங்கைகளுக்கு என்று முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 25 சதவீதம் மானியத்தில் தொழில் துவங்க இந்தியன் வங்கி மூலம் கடனுதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இளங்கலை படித்த எனக்கு என்ன வேலை செய்வது என்பது தெரியாததால் பலருக்கும் கடனுதவி பெற்று தரும் பணியை செய்து வந்தேன். பலருடைய வாழ்க்கை சூழல் மாற உதவிய என்னால் தன்னை சமுதாயத்தில் நிலை நிறுத்தி கொள்ள செய்ய வேண்டியதை நான் யோசிக்கவில்லை.

uvs151120-005இந்நிலையில் அழகு கலையில் ஆர்வம் இருந்ததால் உடனடியாக சென்னையில் உள்ள பிரபலமான பெண் அழகு கலை நிபுணரிடம் கடந்த இரண்டு வருடங்களாக கலையை கற்று கொண்டேன். தற்போது திருச்சி திறுவெறும்பூர் ரயில்நகர் பகுதியில் லுக் மி என்ற பெண்கள் அழகு கலை நிலையத்தை அமைத்துள்ளேன் என்று விவரித்தார். நாம் அங்கு நேரில் சென்று பார்த்தபோது சிறிய அளவிலான அந்த நிலையத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பல புதிய சாதனங்களை வாங்கி வைத்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அப்பகுதியில் உள்ள பலரும் இவரிடம் தங்களை அழகுபடுத்தி கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன்.

uvs151120-002தொடர்ந்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட அவர் முதல் முதலாக ஒரு பெண்ணிற்க்கு புருவத்தை அழகு படுத்தியபோது மன திருப்தி ஏற்பட்டு பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள எல்லா பெண்களும் இவரை தவிற மற்ற யாரிடமும் செல்வதில்லை என்று தன்னுடைய பணியின் அனுபவங்களை கூறினார். இதுவரை இங்கு வருபவர்கள் அனைவரும் தன்னை குடும்பத்தில் உள்ள ஒருவராக பாவித்து அவர்கள் குடும்பத்தில் நடக்கும் அனைத்து சுப காரியங்களுக்கும் என்னை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள அழைப்பார்கள். இந்த அழகு கலை தொழிலுக்கு வரும் முன் இருந்த வாழ்க்கை முறையை பார்க்கும் போதும் தற்போது உள்ள வாழ்க்கை முறையை பார்க்கும் போதும் எனக்கு ஒரு புதிய சொந்தகள் கிடைத்ததாக தெரிவித்தார்.

uvs151120-007மேலும் இந்த அழகு கலையில் தற்போது ஓஜாஸ் என்ற திருநங்கை போன்று பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார். ஓஜாஸ் என்ற திருநங்கை பிரம்மாண்ட படங்களை தரும் இயக்குநர் சங்கரின் படங்களில் நடிக்கும் கதாநாயகிகளை அழகாக காட்டுவது இவருடைய கைவண்ணத்தில் தான் எனவே திருநங்கையாலும் சாதிக்க முடியும் என்பது இவரை பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன். என்னை போன்ற ஒவ்வொரு திருநங்கைகளும் அவர்களுடைய திறமைகளை வெளி கொண்டுவர தொழில் முனைவோராக மாற வேண்டும் என்றும் அதற்காக என்னுடைய முழு ஒத்துழைப்பையும் தருவேன் என்றும் உறுதியளிக்கிறார்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*