நடிகை சபர்ணா சாவுக்கான காரணம் என்ன

sabarnaசின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகியவற்றில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சபர்ணா திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மதுரவாயலில் இவர் வசிந்து வந்த வீடு கடந்த மூன்று நாட்களாக திறக்கபடாமல் இருந்துள்ளது. மேலும் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்த சென்ற காவல் துறையினர் சபர்ணாவின் உடலை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடிகை சபர்ணா முழு நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், அவரது கையில் பிளேடால் அறுத்த அடையாளங்கள் இருந்தன. இது அவரே அறுத்துக்கொண்டதா? அல்லது வேறு எவரேனும் செய்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சபர்ணாவின் உடல் மீட்கப்பட்ட அப்பார்ட்மெண்டில் மதுபானங்கள், சிகரெட், கஞ்சா போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்துள்ளது. இதனையடுத்து சபர்ணாவின் டைரியை கைப்பற்றியுள்ள காவல்துறை அதனை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சபர்ணா நிர்வாணமாக கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். சபர்ணாவின் வீடு பூட்டாமல் சும்மா மூடியிருந்திருக்கிறது. படுக்கையறையில் சபர்ணா நிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். அருகில் அவரது ஆடை மற்றும் சிறு கத்தி இருந்துள்ளது.

சபர்ணாவின் அறையில் டீக்கப்புகள், பல வகை சிகரெட் துண்டுகள் இருந்துள்ளன. மேலும் போதைப் பொருள் உட்கொண்டதற்கான தடயங்களும் இருந்துள்ளன. சபர்ணாவுக்கு போதைப் பொருள் பழக்கம் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மது வாங்கி குடித்ததற்கான தடயங்களும் உள்ளது.

சப்ரணாவின் வீட்டில் இருந்து போலீசார் டைரி ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் எழுதப்பட்டுள்ள விபரங்கள் மூலம் சில முக்கிய துப்பு கிடைத்துள்ளது.

தமிழில் வாய்ப்பு இல்லாததால் இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி டெல்லி சென்ற இடத்தில் சபர்ணாவுக்கும் சினிமா பிரமுகர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அந்த காதல் தோல்வியில் முடிந்துள்ளது.sabarna-2

சபர்ணாவுக்கு சென்னையில் நெருங்கிய ஆண் நண்பர் ஒருவரும் உள்ளாராம். அவருடன் சபர்ணா அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். கடைசியாக கூட அவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணை தொடர்வதால் சபர்ணா சாவுக்கான காரணங்கள் முழுமையாக பின்புதான் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *