இளம் கணித வல்லுநர்களுக்கான விருது வழங்கும் விழா.ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதுநிலை கணித ஆராய்ச்சி துறை சார்பில் இளம் கணித வல்லுநர்களுக்கான விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கணித துறைத் தலைவர் ரமேஷ்குமார் வரவேற்றார். கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம் துவக்க உரையாற்றினார் .முதல்வர் முனைவர் ராதிகா தலைமையுரையாற்றினார்.
தேசியக் கல்லூரி முதுநிலை கணித ஆராய்ச்சித் துறை இணை பேராசிரியர் முனைவர் முத்துராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றி, இளம் கணித வல்லுநர்களுக்கு பாராடடுச்சான்றிதழும், பரிசுகளும் வழங்கினார் .
மண்ணச்சநல்லூர் ஆதிதிராவிட அரசு மேல்நிலைப் பள்ளி, சிறுகாம்பூர் , முசிறி ,அய்யம்பாளையம்அரசு மேல்நிலைப் பள்ளி, அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இளம் கணித வல்லுநர்கள் நிகழ்வில் பங்கேற்று பரிசுகள் பெற்றனர். நிறைவாக உதவிப் பேராசிரியை தீபா நன்றிக் கூறினார்.