திருச்சி மாணவர்களுக்கு பதக்கம் !

தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவிலான திறந்தநிலை யோகா சாம்பியன்ஷிப் போட்டியினை JCI புதுக்கோட்டை சென்ட்ரல், ஆத்மா அறக்கட்டளை இணைந்து புதுக்கோட்டையில் நடத்தியது.

யோகாசன சிறப்புப் பிரிவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி முதுநிலை வணிகவியல் முதலாமாண்டு மாணவர் ராமகிருஷ்ணன் வெண்கல பதக்கம் பெற்றார். கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம், முதல்வர் முனைவர் ராதிகா, துணை முதல்வர் முனைவர் பிச்சை மணி, யோகாசிரியர் விஜயகுமார் ஆகியோர் பாராட்டினார்கள்.

 

ஸ்ரீ காவேரி கலை பண்பாட்டு மையம்,  திருச்சி பள்ளி,  கல்லூரியில் பல்வேறு கலையில் சிறந்து விளங்குபவர்களுக்கு சாதனை மாணவர் பதக்கம் வழங்கி சிறப்பித்தது. ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி மாணவர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் சூர்யா உள்ளிட்டோரின் யோகக் கலை திறமையை பாராட்டி சாதனை மாணவர் 2017 பதக்கம் வழங்கினார்கள். கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம், முதல்வர் முனைவர் ராதிகா, துணை முதல்வர் முனைவர் பிச்சை மணி, யோகாசிரியர் விஜயகுமார் ஆகியோர் பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *