இரட்டை இலை சின்னம் முடக்கம் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இரட்டை இலை சின்னம் முடக்கம்

 

இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் அளிக்காமல், முடக்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையம்

 

இரட்டை இலை சின்னம் தங்களுக்கு  சொந்தம் என ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் தரப்பு தொடர்ந்து கூறிவருகிறது. இது தொடர்பாக ஓ.பி.எஸ் அணி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தது. இதற்கு தினகரன் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க, இரு தரப்பினரையும் இன்று ஆஜரவாக வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.

எனவே, இரு தரப்பினருடைய வழக்கறிஞர்களும் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன் தங்கள் வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர்.
இரு தரப்பினருடயை வாதத்திலும் நியாயம் இருப்பது போல் தெரிந்தால், தற்போதைக்கு இரட்டை இலை சின்னம் முடக்கப்படும், அதாவது, இரட்டை இலை சின்னம் யாருக்கும் அளிக்கப்படாமல், அவர்கள் இரு தரப்பினரும் வேறு சின்னத்தை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தும் என செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தது.

 

இன்று இரவு 11.00 மணிக்கு அறிவிப்பு வெளியானது.

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் எந்த அணியினரும் பயன்படுத்தக்கூடாது என கூறி உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியுள்ளது. ஏப்ரல் மாதம் 17ம் தேதிக்குள் அதிமுகவின் இரு தரப்பினரும் உரிய ஆவணங்களை தாக்கல் செய்தால் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர், எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு 1988ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 28 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் வரலாறு திரும்புவதாகவே அரசியல் விமர்சகர்கள் மற்றும் வல்லுநர்கள் கருதுகிறார்கள், கடந்த முறை சின்னம் முடக்கப்பட்ட போது ஜெயலலிதா என்ற ஒரு முக்கிய ஆளுமை தமிழக அரசியலில் உருவானது ஆனால் இந்த முறை அப்படி யாராவாது உருவெடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையடுத்து அ.தி.மு.க. அலுவலகம் மற்றும் பன்னீர் செல்வத்தின் வீடு ஆகியவை போலிஸ் பாதுகாப்பு போட்ப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *