“உடலினை உறுதிசெய்” ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் பள்ளியின் கோடை கால கொண்டாட்டம்

“உடலினை உறுதிசெய்” ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் பள்ளியின்  கோடை கால கொண்டாட்டம் 

 

சௌடாம்பிகா கல்விக் குழுமங்களின் ஓர் அங்கமாகத் திகழும் , திருச்சிராப்பள்ளி , அண்ணாமலைநகர் , ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் உடற்கூறு நலன் கருதி , கோடை கால விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

இம்மாதம் 11ம் தேதி தொடங்கி , ஏப்ரல் 25ம் தேதிவரை மாணவர்களின் தனித்திறன்கள் வெளிப்பட , விளையாட்டுத் துறையில் கபாடி, கோகோ , கைப்பந்து, வாலிபால், டேபிள் டென்னிஸ் , கேரம் , யோகா, இறகுப்பந்து, த்ரோபால், ரைஃபிள் சூட்டிங், வில்வித்தை போன்ற பயிற்சிகள் மிகச் சிறப்பாகத் தரப்படுகின்றன.

 

விளையாட்டுத் துறையில் மிகச் சிறந்த பயிற்சியாளர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சிக்காலம் முடிந்ததும் பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்த “உடலினை உறுதிசெய்” என்பதற்கேற்ப தங்களை முழுமையாகப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.

கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் மாணவர்கள் சாதனை புரியவேண்டும் என்ற நோக்கில் சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர். திரு.ராமமூர்த்தி அவர்களும், செயலர்.திரு.செந்தூர் செல்வன் அவர்களும், கல்வி ஆலோசகர் திருமதி.சிவகாமி விஜயகுமார் அவர்களும், ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதன்மை முதல்வர் திரு.ராஜ்மோகன் அவர்களும் , விளையாட்டுப் பயிற்சிகளை சிறப்பாக நடத்த எல்லா வித்திலும் உறுதுணையாக இருந்து , மாணவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *