angusam 28/04/2017

போத்தீஸ் ஜவுளி கடையை பத்தி உங்களுக்கு என்ன தெரியும். !

1923 கே.வி. பொதி மூப்பனார் ஆரம்பித்தார். பொதி மூப்பனார். என்கிற பெயரியே கடையை நடத்தி வந்தார். அப்போது சொந்தமான தறியிலே உற்பத்தி செய்து கார்டன் சேலை, வேட்டிகளை முதன் முதலில் விற்பனை செய்ய ஆரமித்தார்கள்.இதன் பிறகு கே.வி. பொதி மூப்பனாரின் மகன் கே.வி.சடையாண்டி மூப்பனார், கடந்த 1977ம் ஆண்டு, அப்பாவிற்குப் பிறகு இந்தத் தொழிலுக்கு பொறுப்பேற்றார். அதன் பிறகு முதற்கட்டமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆரம்பித்து, அதுவரைக்கும் இருந்த பொதி மூப்பனார் எனும் பெயரை “போத்தீஸ்” என பெயர் மாற்றம் செய்தார்கள்.இவரின் அதிரடி மாற்றத்திற்குப் பிறகு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அந்த வரவேற்புதான் இவர்களை கடுமையான உழைக்க வைத்தது. தொழிலில் நம்பிக்கை, நாணயம் ஆகியவற்றின் அடிப்படையில், ஜவுளி வியாபாரத்தின் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் 207ம் இடத்தில் உயர்ந்திருக்கிறது போத்தீஸ் குழுமம். இப்போது இவர்கள் சொத்து மதிப்பு ரூபாய்1900 கோடி. இந்த அளவிற்கு உயர்ந்த சடையாண்டி மூப்பனார், இந்த தொழிலை இன்னும் விரிவாக்க தன் மகன்களையும் பேரன்களையும் இந்தத் தொழில் இறக்கினார். இதன் மூலம் போத்தி்ஸ் துணி வியாபாரம் மூன்றாம் தலைமுறைக்கு எடுத்துச் சென்றுள்ளது.

சமீபத்தில் போத்தீஸ் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியது. ஒரு பிரமாண்ட சேலையை உருவாக்கினார்கள். இந்தியாவின் அத்தனை சிறப்பு அம்சங்களையும் ஓவியம் போல் உருவாக்குகிறார்கள். .இதை உற்பத்தி பண்ணுவதற்கு 8 மாதங்கள் எடுத்துக்கொண்டனர். இந்தச் சேலையின் எடை 40 கிலோ ! இந்தச் சேலை உற்பத்தி செலவு 22 இலட்சம் ஆனதாம். இந்தச் சேலை சென்னை தி.நகர் போத்தீஸ் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.

இங்கே சிறப்பே சாமுத்திகா, பரம்பரா, வஸ்திரகலா, டிசைனர் சேலை எல்லாம் இங்கே குவிந்து கிடக்கிறது. இவை எல்லாம் இவர்களின் சொந்த தயாரிப்பு என்பது தான் வேறு எந்த நிறுவன துணி கடைகளுக்கு இல்லாத சிறப்பு அம்சம்.

இது இல்லாமல் மணமகள், மகன் புகைப்படம். கொண்ட பெயர்களை சேலையின் முந்தானையில் பிரிண்ட் பண்ணி தருகிறார்கள், இந்த மாதிரி விற்பனையின் மூலம் பெஸ்ட் பிரைடல் விருது வாங்கியிருக்கிறார்கள்..

போத்தீஸ் விளம்பரங்களில் அதன் எம்.டி ரமேஷ் மற்றும் நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோர் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்கள்.

28.04.2017 நம்ம திருச்சி வார இதழில் வெளி வந்தது..

பொதுவாகக் காலம் காலமாக தரமான தொழிலை நாம் செய்வதன் மூலம் நாம் சமுதாயத்தில் முக்கியமான முத்திரை பெறுவதை தவிர்க்க முடியாது அப்படிப் பட்ட பெயரைத் தான் போத்தீஸ் தற்போது மக்கள் மத்தியில் கிடைத்திருக்கிறது.

இதன் பலனாக 1986ல் திருநெல்வேலியில் புதிய கிளையை ஆரம்பித்தார்கள். அதன்பிறகு வெற்றி இவர்கள் வசம் ஆனது, மக்கள் நம்பிக்கையை மிகுந்த கடையாக உயர்ந்தது. கடந்த 90 வருடங்களாக 3 தலைமுறையாகச் செய்து கொண்டிருக்கும் பாரம்பரியம் போத்தீஸ், மெல்ல மெல்ல இப்போது, ஸ்ரீவில்லிப்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, சென்னை, கோயமுத்தூர், நாகர்கோவில், திருவனந்தபுரம், கேரளா, புதுச்சேரி, என வளர்ந்து நிற்கிறது. அதன் அடுத்தகட்டமாக தற்போது நம்ம திருச்சியிலும் புதிய கிளையை வருகிற 2017 ஏப்ரல் மாதம் 30-ம்தேதி பிரமாண்டமாகத் துவங்கப்படுகிறது.

இந்த போத்தீஸ் ஜவுளிக் கடையை நீங்கள் ஒரு முறை வந்து பாருங்கள்.. நிரந்தரமாக போத்தீஸ் குடும்ப அங்கத்தினராக மாறிவிடுவீர்கள் என்கிறார்கள் போத்தீஸ் நிர்வாகிகள்.

திருச்சியின் புதிய வரவான போத்தீஸுக்கு நம்ம திருச்சி வார இதழ் சார்பாக வாழ்த்துக்கள்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*