சலுகை கட்டத்தில் புகழ் பெற்ற மெட்ரிக் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டுமா ? உடனே விண்ணபிக்கவும்.

சலுகை கட்டத்தில் புகழ் பெற்ற மெட்ரிக் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டுமா ? உடனே விண்ணபிக்கவும்.

சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் சேர திருச்சி மாவட்டத்தில் 4,143 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிபள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகைசெய்யப்பட்டுள்ளது.

27.04.2017 நம்ம திருச்சி வார இதழில் வெளியான கட்டுரை

சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்தபிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும்பொருட்டு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன், 2017-2018-ம் கல்வியாண்டிற்கு திருச்சிமாவட்டத்திலுள்ள 313 சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் (மெட்ரிக், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) எல்.கே.ஜி. மற்றும் முதலாம் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 4,143 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்குஇணைய வழியில் (ஆன்லைன்) விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் பதிவேற்றம்

இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும்இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப்பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தியாகஅளிக்கப்படும். முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர்ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

குலுக்கல் முறையில் தேர்வு

மாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மையங்களை பதிவேற்றம் செய்வதற்கு பயன் படுத்திக் கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வுநடைபெறும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யால்பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள்போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கைவழங்கப்படும்.

மே 18-ந் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில்வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிபள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்குமுதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *