நீட் தேர்வு மையத்தில் பரிசோதனை என்கிற பெயரில் நடந்த கடுமை !

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வந்தது.
இது என்னங்க கொடுமையாக இருக்குது.

இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2017–2018–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. சுப்ரீம் கோர்ட்டும் ‘நீட்’ தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று உத்தரவிட்டது.இதனால், தமிழக மாணவர்களுக்கு ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற தமிழக அரசு பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

காதுக்குள்ள என்ன வச்சிருக்க பின் பாக்கெட்டில் என்ன வச்சிருக்க..

தமிழகத்தில் 57 மையங்கள்

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான பேர் இந்த தேர்வை எழுதினர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 57 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

சென்னையில் பல்லவன் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளிட்ட 13 மையங்களில் தேர்வு நடந்தது.

85 ஆயிரம் பேர் எழுதினர்தமிழகத்தில் நீட் தேர்வை எழுத 90 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் பலர் தேர்வு எழுத வரவில்லை. சுமார் 85 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். கடந்த வருடம் தேர்வு எழுதிய சிலரும், இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினர். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

முழுகை சட்டையா வெட்டு, காது தோட்டை கழற்று விடாதே மூக்கூக்தியும் கழற்று..

 

காலை 7.30 மணி முதல் 9.30 மணிவரை மாணவ–மாணவிகள் தேர்வு எழுத மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்த மாணவ–மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர்.

கடும் கட்டுப்பாடுகள்

கத்தரிக்கோலால் வெட்டி அரைக்கை

சில மாணவர்கள் விதிமுறைகளை நன்றாக படிக்காமல் தேர்வு எழுத அரைக்கை சட்டைக்கு பதிலாக முழுக்கை சட்டை அணிந்தபடி வந்திருந்தனர். அவர்களிடம், ‘‘நீங்கள் முழுக்கை சட்டை அணிந்தபடி வந்திருக்கிறீர்கள் என்றும் இப்படியே உங்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது’’ என்று பரிசோதனை செய்தவர்கள் கூறினார்கள்.

உடனே அந்த மாணவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் முழுக்கை சட்டையை கத்தரிக்கோலால் வெட்டி அரைக்கையாக்குங்கள் என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள கடையில் கத்தரிக்கோல் வாங்கி தேர்வு எழுதுவோரின் முழுக்கைசட்டையை வெட்டி அரைக்கை சட்டையாக்கினார்கள். சில மாணவர்கள் சட்டையை பெற்றோர்களிடம் கழற்றி கொடுத்து அதன் பின்னர் அரைக்கை சட்டையாக்கினார்கள். இது போல முழுக்கை சட்டை அணிந்தோர் அனைவரும் தங்கள் சட்டையை அரைக்கையாக்கினார்கள்.

கொலுசை கழற்றினார்கள்

சில பெண்கள் தலை முடியில் ‘கிளிப்’ மாட்டிய படி வந்திருந்தனர். அவர்களிடம் உள்ள கிளிப்பை சோதனையாளர் அகற்றியதால், தலை முடியை விரித்தபடியே அவர்கள் தேர்வு எழுத சென்றனர்.

சில மாணவிகள் காலில் கொலுசு அணிந்தபடி வந்திருந்தனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பெற்றோர்கள் அவசர, அவசரமாக தனது மகள்களின் கால்களில் கிடந்த கொலுசை கழற்றினார்கள். பர்தா அணிந்து செல்லவும் அனுமதிக்கவில்லை.  இப்படியாக பல சோதனைகள் நடைபெற்றன.

தேர்வு முடிவு எப்போது?நீட் தேர்வு முடிவு ஜூன் மாதம் 8–ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்வு முடிவை www.cbse.neet.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மேலும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் (ரேங்க்) வெளியாகும்.

கைய வெட்டு… வேற வழியில்ல..

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவ படிப்புக்கான மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிடும். இந்த 15 சதவீத மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும்.

காதுக்குள்ள என்ன இருக்கு… லைட் அடிச்சு பாக்குறேன்…

தமிழகத்தில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள் போக மீதம் உள்ள 85 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அரசு நடத்தும். இதற்கான அறிவிப்பு பின்னர் தமிழக அரசால் வெளியிடப்படும்.

நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 65 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்களும், 25 ஆயிரம் பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *